ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் வான்வெளியில் அமெரிக்க போர்விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் F15E வகை போர்விமானம் ஈரான் மீது பறந்து கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரில் ஒருவரை அமெரிக்க சிறப்பு படைகள் மீட்டுள்ள நிலையில், மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.