உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? தட்கல் பாஸ்போர்ட் மூலம் பெறலாம் – எவ்வளவு நாள் ஆகும்?

Tatkaal Passport Tips : இந்தியாவில் மருத்துவம், கல்வி, வேலை போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம். ஆனால் அவசர தேவைகளுக்கு உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்காது. இந்த நிலையில் தட்கல் பாஸ்போர்ட் என்ற முறையின் மூலம் உடனடியாக பாஸ்போர்ட் பெறலாம். இந்த திட்டத்தில் எவ்வளவு நாளில் பாஸ்போர்ட் கிடைக்கும்? தேவையான ஆவணங்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? தட்கல் பாஸ்போர்ட் மூலம் பெறலாம் - எவ்வளவு நாள் ஆகும்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Jun 2025 18:10 PM

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுற்றுலா ஆகிய காரணங்களுக்காக செல்லும் போது பாஸ்போர்ட் (Passport) எடுத்து செல்ல வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசர நிலை ஏற்படும் போது பாஸ்போர்ட் உடனடியாக கிடைக்காது. இந்த நேரங்களில் தட்கல் பாஸ்போர்ட் (Tatkaal Passport) உடனடியாக கிடைக்கும். தட்கல் பாஸ்போர்ட் என்பது அவசர தேவைக்காக பாஸ்போர்ட் பெற விரும்புவோருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்கும் ஒரு திட்டமாகும்.  புதிதாக பாஸ்போர்ட் பெறவோ அல்லது காலாவதியான பாஸ்போர்ட்டை மீண்டும் புதுப்பிக்கவோ இந்தத் திட்டத்தின் மூலம் விரைந்து பெறலாம். இதற்கு அரசு அலுவலர்களிடமிருந்து உண்மையறிதல் சான்றிதழ் (Verification Certificate) தேவையில்லை என்பதுதான் முக்கிய சிறப்பம்சம்.

தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

தட்கல் திட்டத்தில் பாஸ்போர்ட் பெற, பாஸ்போர்ட் சேவா இணையதளத்தின் படி கீழ்காணும் ஆவணங்களில் எந்தவொரு 3 ஆவணங்களை வழங்கினாலே போதும்.

தட்கல் பாஸ்போர்ட் எங்கே விண்ணப்பிப்பது?

அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மேற்சொன்ன ஆவணங்களை சமர்பித்து தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/online/tatkaalPassports  என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் தேவையான ஆவணங்கள் சமர்பித்து அதற்கான கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தட்கல் பாஸ்போர்டுக்கான கட்டணம் எவ்வளவு?

பாஸ்போர்ட் இந்தியா இணையதளத்தின்படி:

  • 36 பக்க பாஸ்போர்ட் (10 வருடம் செல்லுபடியாகும்): ரூ.3,500

  • 60 பக்க பாஸ்போர்ட் (10 வருடம்): ரூ.4,000

  • இழந்த/சேதமடைந்த/திருடப்பட்ட பாஸ்போர்டுக்குப் பதிலாகக் பெறும் பாஸ்போர்ட் (36 பக்கங்கள்): ரூ.5,000

பாஸ்போர்ட் பெற எவ்வளவு நாள் ஆகும்?

விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு கிராண்ட்டட் (Granted) என்ற நிலை வந்தவுடன், மூன்றாவது வேலை நாளில் பாஸ்போர்ட் அனுப்பப்படும். இதில் விண்ணப்பம் சமர்ப்பித்த நாளைக் கணக்கில் கொள்ளமாட்டார்கள். மேலும் போலீஸ் சரிபார்ப்பு முடிவதற்காக காத்திருக்க தேவையில்லை.

தட்கல் பாஸ்போர்ட் யாருக்கு கிடையாது?

பாஸ்போர்ட் சேவா இணையதளத்தின் படி, கீழ்காணும் பிரிவினருக்கு தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படாது:

  • வெளிநாடுகளில் பிறந்த இந்திய பெற்றோரின் பிள்ளைகள் (Citizens by Descent)

  • இந்திய குடியுரிமை பெற்றவர்கள்

  • பெயரை மாற்ற விரும்புவோர்

  • ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

  • இந்திய அல்லது வெளிநாட்டு பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

  • பெற்றோர் விவாகரத்து செய்யாத நிலையில் அவர்களிடம் இருந்து பிரிந்து வாழும் குழந்தைகள்

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்பட்டால், அதற்கு தட்கல் திட்டம் மிகச் சிறந்த வழி. தேவையான ஆவணங்களை தயார் செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி விரைவில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக தாங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்களா என்பதையும் ஒருமுறை தெரிந்துகொள்வது அவசியம்.