சிறிய பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் அவசியமா? நன்மைகள் என்ன?
Travel Insurance : முன்பே திட்டமிடப்படாத அவசர பயணங்களின் போது டிராவல் இன்சூரன்ஸ் மிகவும் அவசியம். திடீரென நமது பயணங்கள் ரத்தானாலோ, அல்லது விபத்துகள் ஏற்பட்டாலோ டிராவல் இன்சூரன் அதனை கவர் செய்யும். இந்த நிலையில் சிறிய பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் ஏன் அவசியம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா (India) போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் திடீர் பயணங்கள் பெரும் சவாலாக இருந்து வருகிறது. வேலை காரணமாக ஒரு நகரத்தில் இன்னொரு நகரத்துக்கு செல்லும் சிறிய பயணங்கள் முதல் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணங்கள் வரை இந்தியர்கள் அடிக்கடி குறுகிய கால பயணங்களை மேற்கொள்கின்றனர். பயணங்கள் ரத்து செய்யப்பட்டால், விபத்து ஏற்பட்டால் டிராவல் இன்சூரன்ஸ் (Travel Insurance) நமக்கு பல வகைகளில் உதவுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு டிராவல் இன்சூரன்ஸ் குறித்து புரிதல் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது குறுகிய கால பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் தேவையில்லை என நினைக்கிறார்கள். குறுகிய கால பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் அவசியமா அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிராவல் இன்சூரன்ஸில் கவராகும் அம்சங்கள்
டிராவல் இன்சூரன்ஸ் என்பது உங்கள் பயணத் திட்டங்களில் ஏற்படும் எதிர்பாராத தடைகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு அம்சமாக விளங்குகிறது. சிறிய பாதிப்புகள் முதல் பெரிய விபத்துகள் வரை டிராவல் இன்சூரன்ஸ் ஒருவரை முழுமையாக பாதுகாக்கும்.
மருத்துவ அவசரநிலை
வெளிநாடுகளில் திடீரென உடல்நலக் கோளாறோ அல்லது விபத்துக்குளோ ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு சாதாரண சிகிச்சை செலவு ரூ. 2 லட்சத்திற்கு மேல் செல்லலாம்.
பயணங்கள் ரத்து அல்லது தடை
உடல் நிலை, விபத்து போன்ற காரணங்களால் உங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இழப்புகளை டிராவல் இன்சூரன்ஸ் கவர் செய்யும். அது மட்டுமல்லாமல் முன்பே செலுத்திய ஹோட்டல் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கான தொகையை காப்பீடு கம்பெனி நமக்கு அளிக்கும்.
பொருட்கள் கிடைக்க தாமதம்
முன்பே திட்டமிடாத அவசர விமான பயணங்களின் போது நமது உடமைகள் அடங்கிய பைகள் தாமதமாகவே நமக்கு கிடைக்கும். அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் செலவை காப்பீடு மூலம் பெற முடியும்.
பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இழப்பு
பாஸ்போர்ட்டை இழக்கும்போது புதிய பாஸ்போர்ட் பெற தேவையான செலவையும், உதவிகளையும் சில காப்பீடு திட்டங்கள் வழங்குகின்றன. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிக்கும்போது, அவசர நிலைகளின் போது செலவுகளையும் சில காப்பீடு திட்டங்கள் கவர் செய்யும்.
என்ன கவர் செய்யப்படாது?
- ஏற்கனவே இருந்த உடல்நிலை பிரச்னைகளுக்கான செலவுகள்
- தானாக ஏற்பட்ட காயங்கள்
- போர் மற்றும் கலவரங்கள்
- ஆபத்துகள் நிறைந்த அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்
எந்த சந்தர்ப்பங்களில் குறுகிய பயணத்திற்கும் இன்சூரன்ஸ் தேவை?
-
விசா பெற சில நாடுகள் கட்டாயமாக காப்பீடு கோருகின்றன.
-
வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும்போது காப்பீடடு அவசியம்.
இவர்கள் உடல்நிலை சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம். -
பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் முன்பே செலுத்தப்பட்ட ஹோட்டல் ரூம்களை ரத்து செயய் முடியாதவை என்பதால் காப்பீடு பெறுவது அவசியம்.
-
மழை, புயல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளும்போது பயணங்கள் திடீரென ரத்தாக வாய்ப்பிருக்கிறது.
-
லேப்டாப்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களுடன் பயணிக்கும்போது காப்பீடு அவசியம்.