PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
Post Office Saving Scheme with High Interest Rate | அஞ்சலங்கள் மூலம் பல வகையான செமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், எந்த திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய குடிமக்களின் நலனுக்காக அரசு அஞ்சலங்கள் மூலம் சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC – National Saving Certificate) ஆகிய திட்டங்கள் தான் அதிக வட்டி வழங்கும் திட்டம் என பொதுமக்கள் நினைக்கின்றனர். ஆனால், அதனை விட அதிக வட்டி கிடைக்கக்கூடிய திட்டம் ஒன்று உள்ளது. அது என்ன திட்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
இந்தியாவில் உள்ள சாமானிய மக்கள் நிதி பாதுகாப்பை பெறும் வகையில் அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி மற்றும் நிதி பாதுகாப்பு வழங்கப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் தேசிய சேமிப்பு சான்றிதழ், பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்கள் அதிக வட்டி வழங்க கூடியவையாக கருதுகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் விட அதிக வட்டி வழங்கும் திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) திட்டம் தான்.
இதையும் படிங்க : Post Office Scheme : மாற்றமில்லை.. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
பிபிஎஃப், என்எஸ்சி திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் திட்டம்
அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டங்கள் தான் அதிக வட்டி விகிதம் உள்ள அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என கருதுகின்றனர். ஆனால், அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தான் இந்த திட்டங்களை விட சிறந்தது. காரணம், இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்றால் என்ன?
பெண் குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக திட்டம் தான் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா. இந்த திட்டத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவளர்கள் பெண் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 18 வயது வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முடிவில் சிறந்த பலன்களுடன் பெரிய தொகை கிடைக்கும் நிலையில், இந்த திட்டம் வரி விலக்குக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.