AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SIP Vs PPF.. யார் யாருக்கு எந்த திட்டம் சரியானதாக இருக்கும்?.. முழு விவரம் இதோ!

SIP Vs PPF Investment Schemes | சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. அத்தகைய திட்டங்கள் தான் பிபிஎஃப் மற்றும் எஸ்ஐபி. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களில் எதில் முதலீடு செய்வது சிறந்த லாபம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

SIP Vs PPF.. யார் யாருக்கு எந்த திட்டம் சரியானதாக இருக்கும்?.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Feb 2026 15:26 PM IST

தற்போதைய சூழலில் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பொதுமக்கள் தங்களது பணம் பாதுகாப்பாக மற்றும் பல மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் சிறந்த திட்டங்கள் எது என்பது தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) மற்றும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) ஆகிய இரண்டு திட்டங்களில் எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஸ்ஐபி முதலீடு

எஸ்ஐபி பணத்தை பல மடங்கு அதிகரிக்கும் சிறந்த திட்டமாகும். பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த திட்டத்தில், சீரான இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் முதலீடு செய்யல்லாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்த நிலையில், நீங்கள் அதிக தொகை முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : யுபிஐ-ல் இஷ்டத்திற்கு செலவு செய்யும் நபரா நீங்கள்.. இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு தான்!

பிபிஎஃப் திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு மற்றும் உறுதி அளிக்கப்பட்ட வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கான குறைந்த பட்ச முதலீடு ரூ.500 ஆக உள்ள நிலையில், அதிகபட்ச முதலீடு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : துபாயில் இருந்து தங்கம் வாங்கி வருவது லாபகரமானதா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்த மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களுமே சிறந்த லாபத்தை கொடுக்க கூடியவையாக உள்ளன. ஆனால், பாதுகாப்பான லாபத்தை பெற விரும்பும் நபர்களுக்கு பிபிஎஃப் சிறந்த தேர்வாக இருக்கும். இதுவே சந்தை அபாயங்கள் குறித்து கவலை இல்லை, பணம் பல மடங்காக உயர வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு எஸ்ஐபி சிறந்த தேர்வாக இருக்கும்.