பவர் பெட்ரோல் விலை ரூ.2 உயர்வு – சாதாரண பெட்ரோல் விலை எவ்வளவு?
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டட் நிறுவனம் பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டட் நிறுவனம் பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த புதிய விலை மார்ச் 20, 2026 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து செலவு உயர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.




இதையும் படிக்க : விமானப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ஈசியா சீட் செலக்ட் பண்ணலாம்..!
பவர் பெட்ரோல் விலை ரூ.2 உயர்வு
Premium petrol in India becomes costlier by up to Rs 2.35 from March 20, 2026
Prices of BPCL’s Speed, HPCL’s Power, and IOCL’s XP95 increased by Rs 2.09–Rs 2.35 per litre.
However, there is no change in the price of regular petrol at present.— ANI (@ANI) March 20, 2026
எரிபொருள் தட்டுப்பாடா?
இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு பற்றிய வநத்தைகளை மறுத்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை. வழக்கம்போல எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் 110 டாலரை கடந்த நிலையில், தற்போது சுமார் 105 டாலர் என்ற அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : LPG Crisis: கத்தாரிலிருந்து இந்தியா வந்த 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி.. எத்தனை சிலிண்டர்களை நிரப்பும் தெரியுமா?
பவர் பெட்ரோல் என்பது அதிக தரம் கொண்ட எரிபொருள். இது பொதுவாக விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் மைலேஜை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த விலை உயர்வு பெரும்பாலும் உயர் தர வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மட்டுமே பாதிக்கும் என்று கூறப்படுகிறது.