Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Unreserved பயணத்திற்கு கையில் டிக்கெட் கட்டாயமில்லை.. இந்திய ரயில்வே விளக்கம்!

Indian Railways Clarifies Digital Ticket Rule | இந்திய ரயில்வேயின் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் பட்சத்தில் ரயில் டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து வர வேண்டும் என தகவல் வெளியானது. இதற்கு இந்திய ரயில்பே மறுப்பு தெரிவித்துள்ளது.

Unreserved பயணத்திற்கு கையில் டிக்கெட் கட்டாயமில்லை.. இந்திய ரயில்வே விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Dec 2025 13:15 PM IST

இந்தியர்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில்கள் உள்ளன. காரணம், குறைந்த விலையில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு கோடிக்கணக்கான மக்களின் முதன்மை பயண தேர்வாக ரயில்கள் உள்ள நிலையில், பயணிகள் மிக எளிதாகவும், எந்த வித சிக்கலும் இன்றி பயணம் செய்யும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரயில்வே (Indian Railway) ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது கையில் கட்டாயம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்று தகவல் பரவியது. தற்போது இது குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.

டிக்கெட்டை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என் வெளியான தகவல்

அரசு பொதுமக்கள் மிக எளிதாக சேவைகளை பெறும் வகையில் தனது துறைகளை டிஜிட்டல் மயமாக மாற்றி வருகிறது. அந்த வகையில், ஐஆர்சிடிசி, யுடிஎஸ் உள்ளிட்ட செயலிகள் மூலம் பொதுமக்கள் மிக எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது. இவ்வாறு ஆன்லைன் செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதனை மொபை போனில் டிஜிட்டல் முறையில் வைத்தே பயணம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் ஒன்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!

முன்பதிவில்லாத டிக்கெட்டில் பயணம் செய்வரகள் கட்டாயம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்?

அதாவது ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மூலம் பயணம் செய்யும் பயணிகள் கையில் டிக்கெட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இந்திய ரயில்வே இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய கூடிய பயணிகள் கட்டாயம் அதனை பிரிண்ட் முறையில் கொண்டு வர வேண்டும் என்ற எந்த ஒரு புதிய உத்தரவையும் ரயில்வே பிறப்பிக்கவில்லை என்றும், ஏற்கனவே இருக்ககூடிய நடைமுறைகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் இந்திய ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.