AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சியை வாங்கப் போகிறதா? உண்மையில் நடந்தது என்ன?

HDFC-ICICI Merger Talk Goes Viral : முன்னாள் எச்டிஎப்சி லிமிடெட் தலைவர் தீபக் பாரேக், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தா கொச்சர் ஆகியோர் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் இணைப்பு குறித்து யூடியூபில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சியை வாங்கப் போகிறதா? உண்மையில் நடந்தது என்ன?
எச்டிஎஃப்சி - ஐசிஐசிஐ
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 16:03 PM IST

முன்னாள் எச்டிஎஃப்சி (HDFC) லிமிடெட் தலைவர் தீபக் பாரேக், ஐசிஐசிஐ (ICICI) வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தா கொச்சர் வங்கி இணைப்பு குறித்து பேசியிருந்தனர்.  இது வங்கி துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சந்தா கொச்சர் தனது யூடியூப் சேனலில் தீபக் பாரேக்குடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, ”ஐசிஐசிஐ வங்கி தான் எச்டிஎப்சி வங்கியை உருவாக்கியது. எனவே மீண்டும் ஐசிஐசிஐயுடன் இணைந்து விடலாமே என நீங்கள் கேட்டது நன்றாக நினைவில் இருக்கிறது என சந்தா கொச்சர்,  தீபக் பாரேக்கிடம் தெரிவித்தார்.  அதற்கு நீங்கள் எங்களுக்கு தற்போது உருவாகியிருக்கும் பெயர் உள்ளிட்ட பல காரணங்களால் அது சரியாக இருக்காது என்று தீபக் பாரேக் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எச்டிஎஃப்சி நிறுவனம் துவங்கப்படும் போது  நிறுவப்படும்போது அதற்கு ஐசிஐசிஐ நிறுவனம் தான் நிதியுதவி அளித்திருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சியை வாங்கப் போகிறதா?

அந்த நேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வந்தது. ஆனால் சில பொருளாதார ரீதியிலான காரணங்கள், விதிமுறைகள் மற்றும் சந்தை நிலைமைகள் காரணமாக, அந்த யோசனை கைவிடப்பட்டது என்று தீபக் பாரேக் தெரிவித்தார். மேலும் எச்டிஎஃப்சி லிமிட்டெட் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை கடந்த ஜூலை 1, 2023 ஆம் இணைந்தது. இந்த நிணைப்பு நிகழ்வில் நடந்த முக்கியமான விஷயங்கள் குறித்தும் தீபக் பாரேக் தெரிவித்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் அழுத்தம் காரணமா?

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்த தீபக் பாரேக், இந்த இணைப்பு ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அழுத்தத்தினாலேயே நிகழ்ந்தது என வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ரிசர்வ் வங்கி, இந்த இணைப்பு குறித்து எங்களுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் அவர்கள் எங்களுக்கு உதவுவதாகவும் தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு கூடுதல் நேரமும் தரப்படவில்லை என்று தெரிவித்தார்.   இந்த இணைப்பு திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டது என்றும், அதுபற்றி அரசுக்கு மட்டும் முன்பே தெரியவேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி மூலமாக அரசு தொடர்பு கொண்டது என்றும் கூறியுள்ளார்.

எச்டிஎஃப்சி லிமிட்டெட் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு குறித்து தீபக் பாரேக்

எச்டிஎஃப்சி லிமிட்டெட் மற்றும் எச்சிடிஎஃப்சி வங்கி இணைப்பு குறித்து பேசிய தீபக் பாரேக், அது ஒரு சோகமும், மகிழ்ச்சியும் கலந்த நாள் என்றார். மேலும் அவர் கூறியதாவது, நாட்டிற்கு பெரிய வங்கிகள் தேவை. வங்கி துறையின் எதிர்கால வளர்ச்சி வாங்குவது மற்றும் விற்பனை செய்வதன் வாயிலாகவே நிகழ வேண்டும் என்றார்.

இந்த இணைப்பு முக்கியமாக  அதிகாரிகள் வலியுறுத்தியதால் நடந்தது. ரிசர்வ் வங்கி எங்களை ஆதரித்தது. ஒரு மனதாக, இந்த இணைப்பை மேற்கொள்ள நாங்கள் தள்ளப்பட்டோம். அவர்களே உதவியும் செய்தார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்காக எங்களுக்குப்  சலுகைகள், தளர்வுகள், கூடுதல் கால அவகாசம் எதுவும் இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின்வழிகாட்டுதலுடன், அந்த செயல்முறையை எளிதாக்கி அனுமதி பெற்றோம்,” என்றும் கூறினார். மேலும் இந்த இணைப்பு மிகவும் ரகசியமாக வைத்திருந்தோம். செய்தி வெளியான அன்று காலையில் மட்டுமே அனைவருக்கும் இது தெரியவந்தது. அரசு மட்டும் தெரிந்து வைத்திருந்தது. ரிசர்வ் வங்கி அவர்களுக்கு அனைத்து விவரங்களையும் அனுப்பியது என்றார்.

Follow Us