AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆல்ட்காயின்ஸ் என்பது என்ன ? இதற்கும் பிட்காயினுக்கும் என்ன வித்தியாசம்?

Altcoins vs Bitcoin: பிட்காயின் என்பது பிட்காயின் ஒரு பணத்தை பாதுகாக்கும் ஒரு நம்பகமான வழியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஆல்ட்காயின் என்பது பிட்காயினை தவிர மற்ற அனைத்து கிரிப்டோகரன்சிகளுக்குமான பொதுவான பெயர். இந்த கட்டுரையில் ஆல்ட்காயின் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆல்ட்காயின்ஸ் என்பது என்ன ? இதற்கும் பிட்காயினுக்கும் என்ன வித்தியாசம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jun 2025 18:08 PM IST

பணம் என்றதும் நமக்கு நாணயம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை தான் நினைவுக்கு வரும், ஆனால் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்பது மத்திய அரசு, வங்கிகள் ஆகியற்றை சார்ந்து இயங்காத ஒரு டிஜிட்டல் நாணய வகை. இது அரசின் கட்டுப்பாடுகளுடன் இயங்காது. இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படும். இதில் பிட்காயின் கடந்த 2009 ஆம் ஆண்டு உருவான முதல் கிரிப்டோ கரன்சியாகும். பிட்காயினைத் (Bitcoin) தொடர்ந்து பல புதிய கிரிப்டோ நாணயங்கள் உருவாக்கப்பட்டன. ஆல்ட்காயின்ஸ் (Altcoins) என்பது பிட்காயினை தவிர மற்ற அனைத்து கிரிப்டோகரன்சிகளுக்குமான பொதுவான பெயர். பிட்காயின் முதன்முதலில் அறிமுகமாகிய பிறகு, 2009 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான ஆல்ட்காயின்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆல்ட்காயின்ஸ் எப்படி பிட்காயினில் இருந்து மாறுபடுகிறது?

பிட்காயின் ஒரு பணத்தை பாதுகாக்கும் ஒரு நம்பகமான வழி மற்றும் பணத்தின் மதிப்பை குறையாமல் நீண்ட காலம் வரை  வைத்திருக்கும் மாற்றாக உருவாக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்காயின்ஸ் பலவிதமான புதிய அம்சங்களை கொண்டு வருகின்றன.

எத்தேரியம் (Ethereum) என்பது இது மூலம் மனித தலையீடு இல்லாமல் ஒப்பந்தங்கள் தானாகவே செயல்பட முடியும். அதாவது ஒரு ஒப்பந்தம் பூர்த்தியானவுடன் தானாகவே பணம் அனுப்பப்படும். இதன் மதிப்பு பிட்காயினை விட அதிகம்.

  • லைட்காயின் (Litecoin) – பிட்காயினை விட வேகமான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

  • மொனேரோ மற்றும் ஜீகேஷ் (Monero & Zcash) ஆகியவை பரிவர்த்தனை விவரங்களை வெளியிடாமல், ரகசியமாக வைத்திருக்கின்றன.

  • சோலனா, கார்டனோ, அவிலாஞ்சி (Solana, Cardano, Avalanche) – வேகமான, குறைவான செலவுகளுடன் கூடிய பரிவர்த்தனைகளுக்காக புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டவை.

ஆல்ட்காயின்ஸ் என்னும் பரிசோனை மையம்

Altcoins என்பது கிரிப்டோ உலகத்தில் புதிய தொழில்நுட்பங்களை சோதிக்க மற்றும் செயல்படுத்த ஒரு பரிசோதனை மையமாக செயல்படுகிறது. ஆல்ட்காயின்கள் வெறும் பணம் அனுப்புவதற்காக மட்டும் இல்லாமல், வேறுசில முக்கிய வேலைகளுக்காகவும் பயன்படுகின்றன.

சில கிரிப்டோ பிளாட்பாரங்களில் எந்த ஒரு செயலையும் செய்ய, ஒரு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை அந்தக் பிளாட்பாரத்தின் சொந்த நாணயத்தில் (altcoin) கொடுக்க வேண்டும். உதாரணமாக எத்தேரியம் (Ethereum) பிளாட்ஃபார்மில் அதனுடைய ‘ETH’ நாணயம் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

கிரிப்டோ நெட்வொர்க்கை பாதுகாப்பதற்கும் பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்கும் வேலை செய்யும் நபர்களுக்கு, ஆல்ட்காயின் இலவசமாக கொடுக்கப்படும்.

கிரிப்டோ உலகில் டி செயலி (DApps), NFT  என தங்களுடைய சேவைகள் அனைத்தையும் ஆல்ட்காயின் மூலம் செயல்படுத்துகின்றன.

முதலீட்டாளர்கள் ஏன் ஆல்ட்காயினை விரும்புகிறார்கள்?

ஆல்ட்காயின்ஸ் மிகவும்லாபம் தரக்கூடிய, ஆனால் அதே நேரத்தில் பெரும் அபாயமும் கொண்ட முதலீடுகளாக இருக்கிறது. இதனால் பல முதலீட்டாளர்கள், பிட்காயினோடு சேர்த்து, ஆல்ட்காயின்ஸை பயன்படுத்தி தங்கள் போர்ட்ஃபோலியோவை சமநிலை செய்கின்றனர்..

Follow Us