AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்டார் குறியீடு உள்ள ரூ.500 நோட்டு போலியானதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

500 Note Star Symbol : சில சமயங்களில் 500 ரூபாய் நோட்டுக்களில் ஸ்டார் குறியீடு இருப்பதை பார்த்திருப்போம். ஒருவேளை ஸ்டார் குறியீடு உள்ள நோட்டுக்கள் போலியானதாக இருக்குமோ என்று பயம் ஏற்படும். உண்மையில் ஸ்டார் குறியீடுக்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டார் குறியீடு உள்ள ரூ.500 நோட்டு போலியானதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jun 2025 20:04 PM IST

பெரும்பாலான இந்திய (India)  ரூபாய் நோட்டுகளில் எண்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சில ரூபாய் நோட்டுகளில் மட்டும் ஸ்டார் குறியீடு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.  பல சமயங்களில் மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டு கிடைக்கும் போது, ​​அது போலியானதா அல்லது உண்மையானதா என்று குழப்பமடைகிறார்கள். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை நீங்கள் எப்போதாவது கவனமாக ஆராய்ந்திருந்தால், சில ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணின் நடுவில் ஒரு சிறிய ஸ்டார் குறியீடு (*) இருப்பதைக் காணலாம். பலர் அத்தகைய நோட்டு போலியாக இருக்கலாம் என்று பயம் கொள்கிறார்கள். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) இது குறித்து தெளிவான தகவல்களை வழங்கியுள்ளது.

ஸ்டார் குறியீடுக்கு பின் உள்ள காரணம் என்ன?

ரிசர்வ் வங்கியின் தகவலின் படி, ஒரு நோட்டின் வரிசை எண்ணில் ஸ்டார் குறியீடு இருந்தால், அது அந்த நோட்டு ஒரு ‘மாற்று நோட்டு’ என்று பொருள். அதாவது, ஒரு நோட்டை அச்சிடும் போது அதில் தவறு ஏற்பட்டால், அது நீக்கப்பட்டு, அதன் இடத்தில் ஒரு புதிய நோட்டு அச்சிடப்படும். இந்தப் புதிய நோட்டின் வரிசை எண்ணில் ஒரு நட்சத்திர சின்னம் இருக்கும். இதனால் அதை ஒரு மாற்றப்பட்ட ரூபாய் நோட்டு என்று அடையாளம் காண முடியும்.

எனவே இந்த ஸ்டார் குறியீட்டை பார்த்து பீதி அடையத் தேவையில்லை. ஸ்டார் குறியீடு உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் முற்றிலும் சட்டப்பூர்வமானவை என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. இதனால் நீங்கள் வழக்கமாக பயன்படுத்துவது போலவே இவற்றையும் பயன்படுத்தலாம். இவை போலியானவை அல்ல. அவற்றின் மதிப்பிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுக்கள் குறித்து விளக்கம்

 

இவ்வகை நோட்டுகள் எப்போதிலிருந்து புழக்கத்தில் உள்ளன?

ரிசர்வ் வங்கி முதன்முதலில் கடந்த 2006 ஆம் ஆண்டு நட்சத்திரக் குறிகளுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதன் படி 100 தொடர் எண் கொண்ட ரூபாய் நோட்டுகளின் தொகுப்பில் உள்ள ஒரு ரூபாய் நோட்டு அச்சிடும்போது தவறு ஏற்பட்டால், அதற்குப் பதிலாக நட்சத்திரக் குறியுடன் கூடிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படும். அதில் உள்ள ஒரு நோட்டு மட்டுமே ஸ்டார் குறியிடூடன் இருக்கும். மற்ற ரூபாய் நோட்டுகள் வழக்கமானதை போல இருக்கும்.

இவ்வகையான ரூபாய் நோட்டுகள் அதிகம் இருக்காது. மொத்தமுள்ள ரூ.500 நோட்டுகளிலும் சுமார் 100 நோட்டுகளில் மட்டுமே ஸ்டார் குறியீடு இருக்கலாம். காரணம் எப்பொழுதாவது தான் இது போன்ற ஸ்டார் குறியீடுகள் கொண்ட நோட்டுகள் அச்சிடப்படும். ஒரு நோட்டு சேதமடைந்தாலோ அல்லது தவறாக அச்சிடப்பட்டது கண்டறியப்பட்டால் மட்டுமே அத்தகைய நோட்டுகள் அச்சிடப்படும்.

 

Follow Us