AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SBI : கடன்களுக்கான வட்டியை குறைத்த எஸ்பிஐ.. தற்போதைய வட்டி விகிதம் என்ன?

SBI Cuts Loan Interest Rates | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து பல வங்கிகள் தங்களின் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. அந்த வகையில், எஸ்பிஐ வங்கியும் தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SBI : கடன்களுக்கான வட்டியை குறைத்த எஸ்பிஐ.. தற்போதைய வட்டி விகிதம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Jun 2025 17:06 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Interest Rate) விகிதத்தை குறைத்து அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள், தங்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை (Loan Interest Rates) குறைத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ (SBI – State Bank of India) கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படி புள்ளிகளை குறைத்துள்ளது. அதாவது வட்டி விகிதத்தில் 0.50 சதவீதம் குறைத்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக குறைத்த ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து வருகிறது. அதற்கு முன்பு 6 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.50 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை மூன்று முறை குறைத்துள்ளது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 சதவீதமாக உள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி குறைத்து வருகின்றன.

ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதமாக குறைத்த ஆர்பிஐ

கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ

ரெப்போ வட்டி விகித குறைப்பு எதிரொலியாக வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டியை குறைத்து வரும், நிலையில் எஸ்பிஐ வங்கியும் வட்டியை குறைத்து அறிவித்துள்ளது. எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. அதன்படி, ரெப்போ அடிப்படையிலான கடன்களின் (RLR – Repo Linked Lending Rate) தற்போதைய வட்டி விகிதம் 7.75 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பிற குறியீடு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதமும் 8.65 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us