AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் ரூ.15,000-த்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. நகை பிரியர்களுக்கு ஷாக்!

Gold and Silver Price In Chennai On August 24, 2026 | சென்னையில் தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் ரூ.15,000-த்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. நகை பிரியர்களுக்கு ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Aug 2026 10:47 AM IST

சென்னை, ஆகஸ்ட் 24 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 24, 2026) ரூ.15,000-த்தை தாண்டியுள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம் விலை

ஜனவரி மாதத்தில் தங்கம் உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலும்,  மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை தங்கம் விலை மந்தமான நிலையில் இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்ததன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம் ஆகஸ்ட் மாதத்தில் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : Bank Holiday : செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக தொடர் விலை உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது. இவ்வாறு தொடர் விலை உயர்வை சந்தித்ததன் காரணமாக தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.1,20,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us