AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலுமே தங்கம் விலை இந்த அளவிற்குச் சரிவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்துவதால் உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்றுக் குறைந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Jun 2026 10:38 AM IST

Gold Price Today: சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக, கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் இன்று அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 வரை குறைந்துள்ளதால் நுகர்வோர்களும், குறிப்பாக இல்லத்தரசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் சனிக்கிழமை விற்ற விலையில் இருந்து இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, சந்தையில் ₹1,06,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.500-க்கு மேல் சரிந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. சனிக்கிழமை விற்ற அதே விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. அதன்படி, இன்று சில்லறை விற்பனையில் வெள்ளி 1 கிராம் எவ்வித மாற்றமுமின்றி ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ தூய வெள்ளி ரூ.2,45,000க்கு வர்த்தகமாகி வருகிறது.

விலை குறைவிற்கான முக்கிய காரணங்கள்:

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலுமே தங்கம் விலை இந்த அளவிற்குச் சரிவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்துவதால் உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை சற்றுக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ காலங்கள் நெருங்கி வருவதால், இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்தி நகைக்கடைகளில் பொதுமக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை:

தேதி கிராம் சவரன்
ஜுன் 29 ரூ.13,300 ரூ.1,06,400
ஜுன் 27 ரூ.13,370 ரூ.1,06,960
ஜுன் 26 ரூ.13,300 ரூ.1,06,400
ஜுன் 25 ரூ.13,140 ரூ.1,05,120
ஜூன் 24 ரூ. 13,350 ரூ. 1,06,800
ஜூன் 23 ரூ. 13,560 ரூ. 1,08,480
ஜூன் 22 ரூ. 13,600 ரூ. 1,08,800
ஜூன் 21 ரூ. 13,600 ரூ. 1,08,800
ஜூன் 20 ரூ. 13,600 ரூ. 1,08,800

Follow Us