AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டு மாதங்களில் தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. கணிப்பு கூறுவது என்ன?

Gold Price Will Turn Upside Down | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் தங்கம் விலை தலைகீழாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாதங்களில் தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. கணிப்பு கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 21:31 PM IST

மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களில் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாம் என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை தலைகீழாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்வை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை குறித்து வெளியாகியுள்ள கணிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போருக்கு மத்தியில் சரிவை சந்திக்கும் தங்கம்

ஈரான் போருக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,070-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போருக்கு முன்னதாக தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-க்குள் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் எப்படி பணம் அனுப்புவது? இதோ எளிய வழி!

இரண்டு மாதங்களில் தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை?

உலக சந்தையில் தங்கம் தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 அமெரிக்க டாலர்களுக்கும் கீழே வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவிலும் தங்கம் விலை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.20 லட்சத்திற்குள்ளாகவே தேங்கியுள்ளது. இந்த நிலையில் தான், சமீபத்தில் வெளியான காமர்ஸ்பேங் வங்கியின் அறிக்கை, தங்கத்தின் விலை உயர்வு ரத்து செய்யப்படவில்லை என்றும், அது தற்காலிகமாக தள்ளிபோயுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க  : வாழ்நாளுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!

இந்த ஆண்டு இறுதியில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என்று காமர்ஸ்பேங்க் கணித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்கான தங்கம் விலை 5,000 அமெரிக்க டாலர்களில் இருந்து 4,800 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. இருப்பினும் அது தற்போதைய விலையில் இருந்து சுமார் 8 சதவீத உயர்வை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us