ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சம் கடந்து விற்பனை.. வரலாறு காணாத புதிய உச்சம்..
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,515 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை, டிசம்பர் 15, 2025: தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,515 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 15, 2025 தேதி ஆன இன்று காலை நிலவரப்படி, ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயத்தில், ஒரு சவரன் தங்கம் 99,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாயை ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அது தற்போது பல மடங்காக உயர்ந்துள்ளது. கடைசியாக அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை உச்சத்தை அடைந்தது. அதாவது, ஒரு சவரன் தங்கம் 97 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அது புதிய உச்சத்தை அடைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 15, 2025 தேதி ஆன இன்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!
ஒரே ஆண்டில் 40,000 ரூபாய் வரை உயர்ந்த தங்கம் விலை:
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 57 ஆயிரம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அது ஒரு லட்சத்தை கடந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட 40,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்த தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மத்திய வங்கிகளில் மற்றும் உலக வங்கியில் தங்கத்தை சேமித்து வரும் காரணத்தினால் இந்த உயர்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தையை விட அதிக லாபம் தந்த தங்கம்!
ஒரு லட்சம் கடந்த தங்கம் விலை:
நவம்பர் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவை கண்டாலும், டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 15, 2025 தேதி ஆன இன்று, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13,653 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,09,224 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 12,515 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,00,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.