Gold Price : ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!
Gold Price Nears 1 Lakh Rupees | தங்கம் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை அடைந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதாவது தங்கம் ரூ.1 லட்சத்தை அடைய இன்னும் ரூ.300 மட்டுமே குறைவாக உள்ளது.
சென்னை, டிசம்பர் 15 : தங்கம் (Gold) கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை அடைந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதாவது, இன்று (டிசம்பர் 15, 2025) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,460-க்கும், ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. ஜனவரி 1, 20205 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டு மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.40,000 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு தங்கம் நாளுக்கு நாள் கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக தங்கம் மாறிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : ஜென்சி தலைமுறையினர் எவ்வாறு பணத்தை செல்வு செய்கின்றனர்?.. சூப்பர் மணி வெளியிட்ட அறிக்கை!
10 நாட்களில் ரூ.3,000 வரை உயர்ந்த தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 06 டிசம்பர் 2025 | ரூ.12,040 | ரூ.96,320 |
| 07 டிசம்பர் 2025 | ரூ.12,040 | ரூ.96,320 |
| 08 டிசம்பர் 2025 | ரூ.12,040 | ரூ.96,320 |
| 09 டிசம்பர் 2025 | ரூ.12,000 | ரூ.96,000 |
| 10 டிசம்பர் 2025 | ரூ.12,030 | ரூ.96,240 |
| 11 டிசம்பர் 2025 | ரூ.12,050 | ரூ.96,400 |
| 12 டிசம்பர் 2025 | ரூ.12,370 | ரூ.98,960 |
| 13 டிசம்பர் 2025 | ரூ.12,370 | ரூ.98,960 |
| 14 டிசம்பர் 2025 | ரூ.12,370 | ரூ.98,960 |
| 15 டிசம்பர் 2025 | ரூ.12,460 | ரூ.99,680 |
இதையும் படிங்க : Year Ender 2025: இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணம் என்ன? – 2026ல் எப்படி இருக்கும்?
ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை
நேற்று (டிசம்பர் 14, 2025) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்ட இன்னும் ரூ.300 மட்டுமே குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.