விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… வைரலாகும் ஜன நாயகன் பட அப்டேட்
Jana Nayagan Movie: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியானது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரைய்ரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கும் படம் தான் அவரது நடிப்பில் இறுதியாக வெளியாகும் படம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் அவரது 69-வது படமாக தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி பீஸ்ட் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் இவர்கள் மட்டும் இன்றி பலர் முன்னணி வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




விரைவில் தொடங்கும் ஜன நாயகன் படத்தின் புரமோஷன் பணிகள்:
அதன்படி ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையி படத்தின் புரமோஷன் பணிகள் இந்த வாரத்தில் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யா எனக்கு சகோதர உணர்வைக் கொடுப்பார்… யுவன் நெகிழ்ச்சிப் பேச்சு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – 09.01.2026 💥
– Theatre Agreement Signing Begins 🖊, The Promotions Starts from this Week 🔥#ThalapathyVijay #HVinoth pic.twitter.com/yEvZZk3Rmo
— Movie Tamil (@_MovieTamil) December 15, 2025
Also Read… ஜன நாயகன் பட ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை – வைரலாகும் தகவல்