சூர்யா எனக்கு சகோதர உணர்வைக் கொடுப்பார்… யுவன் நெகிழ்ச்சிப் பேச்சு!
Music Director Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தனது இசையால் உலக மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருக்கும் நிலையில் அடுத்த தலைமுறையாக இவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் தற்போது. இளையராஜாவின் மகனாக இசைத் துறையில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனது திறமையால் உலக மக்களை தன்வசம் இழுத்தார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சினிமா துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை இசையமைத்து உள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் சூர்யா, அஜித் குமார், விஜய், சிலம்பரசன், தனுஷ், ரவி மோகன், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல நூறு பாடல்களை இசையமைத்து உள்ளார். இவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டும் இன்றி யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பிஜிஎம்மிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்களின் படங்களை மிகவும் மாஸாக காட்ட யுவனின் பிஜிஎம் உதவி செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




சூர்யா எனக்கு சகோதர உணர்வைக் கொடுப்பார்:
இந்த நிலையில் சமீப காலமாக பெரிய அளவில் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பலாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு கொண்டாடினர். இந்த நிலையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதில் அவர் சூர்யா என்னுடைய ஸ்கூல் சீனியர். நான் அவருடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வேலை செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எப்போதும் எனக்கு ஒரு சகோதர உணர்வைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Thaman S: அனிருத்திற்கு தெலுங்கில் சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது.. ஆனால் எனக்கு இல்லை- தமன் எஸ்!
இணையத்தில் கவனம் பெறும் யுவன் சங்கர் ராஜா பேச்சு:
• @Suriya_offl is my school senior. I was super happy to work with him in #PoovellamKettuppar . He gives me a cousin/brother vibes. ❤️ – @thisisysr pic.twitter.com/uM5e62LNFe
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 14, 2025
Also Read… எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் ரிலீஸ் ஆகல- 2025ம் ஆண்டில் வெளியாகாத தமிழ் உச்ச நடிகர்களின் படங்கள்..