பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே செய்த விசயம்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய விஜய் சேதுபதி
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 70 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் நடந்த விசயங்களை வெளிப்படையாக பேசும் விஜய் சேதுபதி இன்று எஃப்ஜேவிடம் கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வாரம் வாரம் பிக்பாஸில் ஒரு டாஸ்க் வழங்கப்படும். அந்த டாஸ்கிற்கு ஏற்றார் போல ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீடு மாற்றி அமைக்கப்பட்டு போட்டியாளர்கள் அந்த டாஸ்கிற்கு ஏற்றப் போல ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று தங்களுக்கு கொடுத்த கதாப்பாதிரத்தை செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முன்னதாக ஹோட்டல் டாஸ், அரண்மனை டாஸ்க், ஸ்கூல் டாஸ்க், ஜமீன்தார் டாஸ்க் என அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்குகள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றாலும் போட்டியளர்களின் குறைகளை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தொடர்ந்து சுட்டிக்காட்டவும் தவறியதில்லை. அதன்படி இந்த வாரமும் நடைப்பெற்ற டாஸ்கில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக விஜய் சேதுபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடு வழக்காடு மன்றமாக மாறியது. அதில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறிய நிலையில் போட்டியாளர்கள் தங்களுக்கு இருக்கு புகார்களை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். அதில் அவர்கள் தங்களுக்கான நீதி வேண்டும் என்று தெரித்து இருந்தனர்.




வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே செய்த விசயத்தை தட்டிக்கேட்ட விஜய் சேதுபதி:
இந்த வழக்காடு மன்றத்தில் மூன்றாவது வாரம் வெளியாகி தற்போது மீண்டும் வைல்கார்ட் போட்டியாளராக வந்த ஆதிரை போட்டியாளர் எஃப்ஜே மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரிக்கும் முன்பே தான் செய்தது தவறு என்று முழுவதுமாக விசாரிப்பதற்கு முன்பே எஃப்ஜே வழக்கை முடித்துவைத்தார். இதுகுறித்து விஜய் சேதுபதி அவரிடம் இன்று வெளிப்படையாக கேள்வி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அந்த ஹிட் படத்தைப் பார்த்துதான் தனுஷை ராஞ்சனாவிற்காக தேர்வு செய்தேன் – இயக்குநர் ஆனந்த் எல் ராய்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day70 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/yFID08FjzQ
— Vijay Television (@vijaytelevision) December 14, 2025
Also Read… 2025-ம் ஆண்டில் முன்னணி நடிகர்களின் சம்பளம் இவ்வளவா? இணையத்தில் வைரலாகும் தகவல்