Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. நடந்தது என்ன?

Siragadikka Aasai's Rajeshwari Passes Away: சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கிய லட்சுமி போன்ற தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் இன்று 2025 டிசம்பர் 12 ஆம் தேதியில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை ராஜேஸ்வரி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Dec 2025 14:56 PM IST

விஜய் டிவியின் (Vijay TV) மிகவும் பிரபலமான தொடராக இருந்துவருவது சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). இந்த தொடரில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை ராஜேஸ்வரி (Rajeshwari). இவர் இந்த தொடரில் அருணின் அம்மா வேடத்தில் நடித்து வந்திருந்தார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார். நடிகை ராஜேஸ்வரி சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் தனது கணவருடன் வசித்துவந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த 2025 டிசம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சலில் இருந்த நடிகை ராஜேஸ்வரி தற்கொலைக்கு (suicide) முயன்றுள்ளார்.

தனது தாய் பயன்படுத்தும் பிபி மாத்திரையை அதிகளவு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் வர தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் சிகிச்சை பலனின்றி உரியிரிழந்துள்ளார். இவரின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : “என் அரும் நண்பனே”.. ரஜினிக்கு சிறப்பு பாடல் வெளியிட்டு, உணர்வுபூர்வமாக வாழ்த்திய கமல் தயாரிப்பு நிறுவனம்.. வீடியோ!!

சிறகடிக்க ஆசை தொடரில் ராஜேஸ்வரி :

கடந்த 2023ம் ஆண்டு முதல் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடராக இருந்துவருவது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலானது விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக இருந்துவருகிறது. இந்த சீரியலில் அருண் கதாபாத்திரத்தின் அம்மா வேடத்தில் நடித்துவந்தவைதான் நடிகை ராஜேஸ்வரி. இவர் இந்த தொலைக்காட்சி தொடரில் மட்டுமில்லாமல் சமீபத்தில் முடித்தன பாக்கிய லட்சுமி தொலைக்காட்சி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவிலும் சில படங்ககளில் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பு சீரியலில் மிகவும் நன்றாகவே இருக்கும். சிறகடிக்க ஆசை தொடர் மிகவும் பிரபலமான சீரியல் என்ற நிலையில், அதில் இவரின் கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் இருகிறார்கள்.

இதையும் படிங்க: இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக சிறை செல்லும் ரம்யா.. வைரலாகும் புரோமோ!

குடும்ப தகராறில் காரணமாக நடிகை ராஜேஸ்வரி இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது கணவருடன் எழுந்து வந்த பிரச்னையின் காரணமாக நடிகை ராஜேஸ்வரி இந்த தவறான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவரின் மறைவிற்கு சிறகடிக்க ஆசை மற்றும் பல சீரியல் பிரபலங்கள் தங்களில் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)