AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : 10வது நாளாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,040 குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Fall For 10th Day In Chennai | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தொடர்ந்து 10வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.

Gold Price : 10வது நாளாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,040 குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Jun 2026 10:27 AM IST

சென்னை, ஜூன் 08 : மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில்,  இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

ஈரான் போரால் சர்வதேச அளவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக, தங்கம்  மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று தொடர்ந்து 10வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

இதையும் படிங்க : இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் எப்படி பணம் அனுப்புவது? இதோ எளிய வழி!

10வது நாளாக சரிந்த தங்கம் விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us