Gold Price : 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Decreased In Chennai | சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.170 குறைந்தும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, பிப்ரவரி 07 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 07, 2026) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்தும், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி
அமெரிக்கா, ஈரான் மற்றும் வெனிசுலா உடனான மோதல் போக்கை கடைபிடித்த நிலையில், புவிசார் பதற்றம் அதிகரித்து தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான உயர்வை சந்திக்க தொடங்கியது. உலக அளவில் தங்கத்தின் தேவை மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி உச்சத்தை தொட்டது. குறிப்பாக ஜனவரி 29,2026 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.16,800-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : 2026-ல் தங்கம், வெள்ளி, காப்பர் உச்சத்தை தொடும்.. பாபா வங்கா கணிப்பு!
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 29 ஜனவரி 2026 | ரூ.16,800 | ரூ.1,34,400 |
| 30 ஜனவரி 2026 | ரூ.15,850 | ரூ.1,26,800 |
| 31 ஜனவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 01 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 02 பிப்ரவரி 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 03 பிப்ரவரி 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 05 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 06 பிப்ரவரி 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
| 07 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
இதையும் படிங்க : வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்.. பிப்ரவரி 2 முதல் அமல்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.