சற்று ஆறுதல் அளித்த தங்கம்.. மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது!
Gold Price Again Come Down From 1 Lakh Rupees | தங்கம் நேற்று (டிசம்பர் 15, 2025) ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 16, 2025) மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
சென்னை, டிசம்பர் 16 : தங்கம் (Gold) நேற்று (டிசம்பர் 15, 2025) வரலாற்றில் முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 16, 2025) தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும், ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட தங்கம்
தங்கம் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இது நகை பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில், இனி சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக தங்கம் மாறிவிடும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியது. இந்த நிலையில், சாமானிய மக்களுக்கு சற்று ஆதரவு அளிக்கும் விதமாக தங்கம் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம்
22 காரட் தங்கம் நேற்று காலை ஒரு கிராம் ரூ.12,460-க்கும், ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை தங்கம் மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதாவது மாலையில் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் இத்தகைய கடும் விலை உயர்வை சந்தித்தது சாமானிய மக்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்த நிலையில், தங்கம் மீண்டும் விலை குறைந்துள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்த தங்கம்
இன்று (டிசம்பர் 16, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.12,350-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.