வட்டியே இல்லாமல் தங்க நகைகளை அடகு வைக்க முடியுமா?.. இந்த அம்சத்தை கொஞ்சம் பாருங்கள்!
Gold Over Draft Loan Scheme | பெரும்பாலான நபர்கள் தங்களது தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைப்பர். அதற்காக அவர்கள் குறிப்பிட்ட சதவீதம் வட்டி செலுத்த வேண்டியது அவசியம். இந்த நிலையில், வட்டியே செலுத்தாமல் தங்க நகைகளை அடகு வைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய கலாச்சாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வியலில் முக்கிய பங்கு வகிப்பது தான் தங்கம் (Gold). தங்கம் இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பது மட்டுமன்றி, சிறந்த முதலீடாகவும் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தங்கத்தை உடலில் அணிவதை விடவும் அதனை எதிர்கால மற்றும் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறைகளை தீர்க்க உதவும் முதலீடாக தான் பலரும் கருதுகின்றனர். அந்த வகையில் பலரும் தங்களது தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று செலவு செய்கின்றனர். அதற்கு குறிப்பிட்ட அளவு வட்டி செலுத்த வேண்டும். இந்த நிலையில், வட்டி இல்லாமல் தங்க நகை கடன் பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படிப்பட்ட ஒரு அம்சம் குறித்து தான் பொருளாதார வல்லுநர் ஒருவர் விளக்கியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி லாக்கரில் தங்கத்தை வைக்கும் தவறை செய்யாதீர்கள்
பலரும் தங்களது தங்க நகைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கி லாக்கரில் தங்களது தங்க நகைகளை வைக்கின்றனர். அது பாதுகாப்பானதாக தோன்றினாலும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. காரணம், நீங்கள் தங்க நகைகளை வைத்திருக்கும் வங்கி திவாலானாலோ, அல்லது வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ உங்களுக்கு வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும். நீங்கள் கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட தங்க நகைகளை அடகு வைத்தாலும் இதுதான் உங்களது நிலமை. இந்த நிலையில் தான் தங்க நகைகள் பாதுகாப்பாக இருக்க, தங்க நகைகளுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது குறித்து வங்கி பொறுப்பேற்க அதுமட்டுமன்றி வட்டியின்றி தங்க நகை பெற கூடிய ஒரு அசத்தல் திட்டம் குறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.




இதையும் படிங்க : வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?
வட்டி இல்லாமல் தங்க நகை கடன் பெறலாம்
You pay ₹5,000 locker rent but the bank’s liability is only ₹5 lakh.
I found a way to keep ₹50 lakh worth of gold safer for half the cost with bank.
Make one change and the bank takes full responsibility for your gold.👇🏻
— Prem Soni (@ValueWithPrem) January 4, 2026
பிரேம் சோனி என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். நீங்கள் வங்கி லாக்கரில் ரூ.5,000 செலுத்தி தங்க நகை வைக்கிறீர்கள், அந்த நகைக்கு ஏதேனும் நடந்தது என்றால் வங்கி உங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே பணம் கொடுக்கும். எனவே லாபமான மற்றும் பாதுகாப்பான முறையில் தங்க நகைகளை வைக்க அவர் சில வழிமுறைகளை கூறியுள்ளார்.
இதையும் படிங்க : டிச.31-க்குள் வருமான வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கவில்லையா?.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
கோல்டு ஓவர் டிராஃப்ட் லோன் பெறுங்கள்
வங்கிகளில் லாக்கர்களை வாடகைக்கு எடுத்து தங்க நகைகளை வைப்பதற்கு பதிலாக, வங்கியில் உள்ள கோல்டு ஓவர் டிராஃப்ட் லோன் (Gold Over Draft Loan) என்ற அம்சத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த முறையில் தங்கத்தை அடகு வைக்கும்போது வங்கிகள் நமது தங்கத்தை பெற்றுக்கொண்டு அவற்றின் மதிப்பு என்ன என்பதை மதிப்பீடு செய்யும். பிறகு அந்த தங்கத்தை எடுத்து அவர்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுவார்கள். அப்போது அந்த நகைக்கான முழு பொறுப்பும் வங்கிக்கு சென்றுவிடும்.
இதையும் படிங்க : 2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.. முக்கிய டிப்ஸ்!
இதை செய்தால் நீங்கள் வட்டியே செலுத்த தேவையில்லை
வங்கிகள் அந்த தங்க நகைகளின் மதிப்பில் 70 சதவீதம் பணத்தை ஓவர் டிராஃப்ட் வரம்பாக நிர்ணயம் செய்வார்கள். இந்த நடைமுறைக்கு செயலாக்க கட்டணமாக நீங்கள் ரூ.10,000 செலுத்த வேண்டியது இருக்கும். அதன்பிறகு நீங்கள் ஜிஎஸ்டி தொகையை செலுத்தினால் போதும். உங்களுக்கு வரக்கூடிய பணத்தை நீங்கள் எடுத்து தேவைப்பட்டால் பயன்படுத்தலாம், இல்லையென்றால் அப்படியே வைத்துவிடலாம். நீங்கள் எவ்வளவு பணம் எடுத்துள்ளீர்களோ அதற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். ஒருவேளை நீங்கள் பணத்தை எடுக்கவே இல்லை என்றால் நீங்கள் வட்டியே செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.