அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ. 960 குறைந்து விற்பனை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,091க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,28,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மே 20, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் சூழலில், மே 20ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் கிட்டத்தட்ட ரூ.960 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு தேவையின் ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,091க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,28,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்கத்தை தொடர்ந்து வெள்ளி வாங்குவதிலும் சிக்கல்.. ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!
வெள்ளி விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.285க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்த சூழலில், இன்று ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற நிலமைக்கு என்ன காரணம்?
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் அதிகமாக திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, உள்நாட்டிலும் அதன் சில்லறை விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது.
மேலும் படிக்க: மொத்த Vs தனித்தனி FD முதலீடு.. இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும்?
அண்மையில் இந்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல்வேறு காரணிகளால் தங்கம் விலை சீரற்ற நிலையிலும் ஏற்ற இறக்கத்துடனும் காணப்படுகிறது.