AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. சர்வதேச அளவில் வெள்ளிக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 277.10 ரூபாய்க்கு விற்பனை.

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 May 2026 10:37 AM IST

Gold Price Today: கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, இன்று (மே 19, 2026) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 120 உயர்ந்து ஒரு கிராம் 14,870 ரூபாயக்கு விற்பனையாகிறது. இதன் மூலம், நேற்று ஒரு சவரன் 1,18,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு 960 அதிரடியாக உயர்ந்து ரூ.1,18,960 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தூய தங்கம் (24 கேரட்):

முதலீட்டாளர்களுக்கான தூய தங்கத்தின் (24 கேரட்) விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 16,091 ரூபாய்க்கு விற்பனையான தூய தங்கம், இன்று கிராமுக்கு 131 உயர்ந்து 16,222 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, 10 கிராம் தூய தங்கத்தின் விலை 1,62,220 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. சர்வதேச அளவில் வெள்ளிக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 3,00,000 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!

விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்:

உலகளாவிய சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளன. இதன் காரணமாக உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து உள்நாட்டிலும் அதன் சில்லறை விற்பனை விலை எகிறி வருகிறது. மே மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது, திருமண சுபமுகூர்த்த நாட்களை வைத்துள்ள குடும்பங்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us