AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சற்று அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ..

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் உயர்வுடன் காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,836-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,18,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சற்று அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jun 2026 11:00 AM IST

ஜூன் 20, 2026: ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து விற்பனை செய்யப்படுவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீண்டும் விலை உயர்ந்த தங்கம்:

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் உயர்வுடன் காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,836-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,18,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டு நோக்கத்திற்காக தங்கம் வாங்குபவர்கள் மற்றும் தங்க நாணயங்கள் வாங்குபவர்கள் இந்த விலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வெள்ளி விலை நிலவரம் என்ன?

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் எதிர்காலத்தில் மாற்றங்களை சந்திக்கக்கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய தங்கச் சந்தையில் தற்போது மந்தமான வர்த்தக சூழல் நிலவி வருகிறது. ஆபரணத் தங்கத்திற்கான தேவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, தங்க இறக்குமதி குறைந்திருப்பது, தங்க இ.டி.எஃப். (ETF) முதலீடுகளில் லாபம் ஈட்டும் நோக்கில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. மேலும், உலகளாவிய பொருளாதார நிலை, வட்டி விகித முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை அணுகுமுறையும் தங்க விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

Follow Us