AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிரடியாக உயர்ந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

Commercial Gas Cylinder Price Increased In Chennai | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Mar 2026 11:36 AM IST

சென்னை, மார்ச் 01 : ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். அந்த வகையில் மார்ச் மாத முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைத்துள்ளன. அதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் (Commercial Gas Cylinder) விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிரடியாக உயர்ந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைப்பதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்று (மார்ச் 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.29.50 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (பிப்ரவரி 28, 2026) வரை ரூ.1899-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : உங்களுக்கே தெரியாமல் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கலாம்.. கவனமாக இருப்பது எப்படி?

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வழக்கம் போல வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.865.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாமானிய மக்களின் அன்றாட தேவைகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் உள்ளது.

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் Vs மூத்த குடிமக்கள் எஃப்டி.. இரண்டில் எது சிறந்தது?

2026, பிப்ரவரி மாதமும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது மார்ச் மாதமும் விலை உயர்ந்துள்ளதால் உணவகம் வைத்திருப்போர் உள்ளிட்ட வணிக சிலிண்டர்களை நம்பியுள்ள தொழில்களை செய்யும் நபர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ச்சியாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயரும் பட்சத்தில் அதன் விலையை குறைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us