AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் வெள்ளி விலை.. ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை..

ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,513-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் வெள்ளி விலை.. ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Aug 2026 10:45 AM IST

ஆகஸ்ட் 13, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் தங்கம் மீண்டும் ரூ.14 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13 ஆயிரம் வரை சரிந்தது.

இன்றைய தங்கம் விலை:

அந்த வகையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.15,513-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த மாதங்களில் பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் தங்கம் பக்கம் திரும்பிய கவனம்:

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2026ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!

ஈரான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி உடனடியாக வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Follow Us