விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்?.. 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு!
8th Pay Commission Important Update | இந்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு முறைப்படி சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அது முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது 8வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாதிரி புகைப்படம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், அகவிலைப்படி ஆகியவற்றை நிர்ணயம் செய்வது தான் ஊதியக்குழு என அழைக்கப்படுகிறது. இந்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 7வது ஊதியக்குழு (7th Pay Commission) முறையை பின்பற்றி ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8வது ஊதியக்குழுவை (8th Pay Commission) அறிமுகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், ஒரு ஊதியக்குழு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இந்த நிலையில், 8வது ஊதியக்குழு எப்போது அறிமுகமாகும், அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்து ஊழியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
8வது ஊதியக்குழு – வெளியான முக்கிய அறிவிப்பு
7வது ஊதியக்குழு 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது 2016 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஒரு ஊதியக்குழுவின் கால அளவு 10 ஆண்டுகளாக உள்ள நிலையில், இந்த 7வது ஊதியக்குழு இந்த ஆண்டுடன் அதாவது 2026 உடன் முடிவடைகிறது. இதன் காரணமாக 8வது ஊதியக்குழு தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் மத்திய அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், ஊழியர்கள் அமைப்புகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ள தொடங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?
டெல்லியில் நடைபெற உள்ள முக்கிய கூட்டம்
ஏப்ரல் 11, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏப்ரல் மாதத்தில் அமைச்சகம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து முடித்துவிட்டு வரும்போது கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது. அமைச்சகம் டெல்லியில் ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டங்களில் ஊழியர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அப்புறம் பாத்துக்கலாம்.. SIP முதலீட்டில் இந்த தவறை செய்யாதீங்க.. கோடிகளில் இழப்பு உங்களுக்கு தான்!
இந்த 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.