ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது? இந்தியாவுக்கு எந்த இடம்? முழு விவரம்

Military Strength Ranking 2025 : உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், அமெரிக்கா முதல் இடத்திற்கு ராணுவம் பலமிக்க நாடாக தொடர்ந்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ரஷ்யா, சீனா, இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகள் டாப் ஐந்துக்குள் சக்திவாய்ந்த ராணுவ பலமாக விளங்குகிறது.

ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது? இந்தியாவுக்கு எந்த இடம்?  முழு விவரம்

ராணுவம்

Updated On: 

14 Sep 2025 21:54 PM

 IST

டெல்லி, செப்டம்பர் 14 : உலகின் பல்வேறு நாடுகளில்  போர் வெடித்து வரும் சூழலில், ராணுவத்தின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.  மேலும், சீனாவுடன் எல்லை பிரச்னை தொடர்ந்து வருகிறது. இலங்கையுடன் கச்சத்தீவு பிரச்னையும் நீடித்து வருகிறது. இம்மாதிரியான சூழலில், இந்தியாவின் ராணுவ பலம் குறித்து கேள்வி எழுகிறது. அந்த வகையில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் ராணுவ பலம் குறித்து தற்போது பட்டியல் வெளியாகி உள்ளது.  உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் 145 நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியலை தயாரித்துள்ளது.  145 நாடுகளின் ராணுவ பலன்களை ஆராய்ந்து, 60க்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் சக்தி வாய்ந்த ராணுவ பலமிக்க நாட்டை தேர்வு செய்கிறது.

ராணுவத்திற்கான பட்ஜெட்டுகள், தொழில்நுட்பம், துருப்புகளின் வலிமை உள்ளிட்டவையின் அடிப்படையில் ராணுவ பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  இதற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, உலக வல்லரசுகளில் முதன்மையானதாக இருக்கும அமெரிக்கா, மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் படையாக கொண்டுள்ளது. ராணுவ ஆயுதத்தில் அமெரிக்கா, 13,043 போர் விமானங்களையும், 4,640 தாக்கிங்களும், 2,127,500 ராணுவத்தினர் உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா ராணுவ பலம் வாய்ந்த நாடாக சிறந்து விளங்குகிறது.

Also Read : ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..

ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது?

ரஷ்யாவில் 3,57,000 ராணுவத்தினரும், 4,292 விமானங்களும் உள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை 895 பில்லியன் ராணுவத்திற்காக செலவிடுகிறது. இதனை தொடர்ந்து, சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. 3,170,000 ராணுவத்தினரையும், 3,309 ராணுவ விமானங்களையும் கொண்டுள்ளது. தொடர்ந்து, நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

51,37,550 ராணுவத்தினரும், 2,229 ராணுவ விமானங்களையும் இந்தியா கொண்டுள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்திற்காக 75 பில்லியனை இந்தியா செலவிடுகிறது. ஐந்தாவது இடத்தில் தென்கொரியா 38,20,000 ராணுவத்தினரை கொண்டுள்ளது. தொடர்ந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், துருக்கி, இத்தாலி போன்ற நாடுகள் அடுத்தடுத்து டாப் 10க்கும் ராணுவ பலம் வாய்ந்த நாடுகளாக உள்ளன.

Also Read : வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!

இதில் நாம் குறிப்பாக பார்க்க வேண்டியது பாகிஸ்தான். ஏனென்றால் அண்மையில் பாகிஸ்தான் இந்தியா இடையே போர் பதற்றம் நிலவியது. இதில், இந்தியா மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், இதனை இந்தியா துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தியது. இந்தளவுக்கு இந்தியாவின் ராணுவ பலம் இருந்தது. பாகிஸ்தான் ராணுவ பலத்தில் 12வது இடத்தில் உள்ளது. மேலும், ஈரான் இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் சூழலில், எந்த நாடுகள் பலம் வாய்ந்து என்பது பார்ப்பது முக்கியம். அதன்படி, இஸ்ரேல் 15வது இடத்திலும், ஈரான் 16வது இடத்திலும் உள்ளன