“மோடி எனது நல்ல நண்பர்” – அதிபர் டிரம்ப் புகழாரம்.. இந்தியா-ரஷ்யா உறவு வலுவாகும் என அதிபர் புதின் உறுதி..
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எனக்கு உங்கள் பிரதமர் மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அதனால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்” என தெரிவித்தார். மேலும், “பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டது. மிக அதிக சுங்கவரி விதித்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இந்தியாவுடன் வர்த்தகத்தின் மூலம் அமெரிக்கா நல்ல வருவாய் ஈட்டுகிறது” என்றும் கூறினார்.
ஜூன் 5, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது “நல்ல நண்பர்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்க தவறியதாக குற்றம்சாட்டி, அந்த நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் 12.5 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான சில நாட்களிலேயே டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எனது நல்ல நண்பர் – அதிபர் டிரம்ப்:
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எனக்கு உங்கள் பிரதமர் மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அதனால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டது. மிக அதிக சுங்கவரி விதித்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இந்தியாவுடன் வர்த்தகத்தின் மூலம் அமெரிக்கா நல்ல வருவாய் ஈட்டுகிறது” என்றும் கூறினார்.
மேலும் படிக்க: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி – ட்ரம்ப் சந்திக்க வாய்ப்பு.. இரு நாடு உறவுகளுக்குப் புதிய உத்வேகம்!
ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். “இந்தியா 200 சதவீத சுங்கவரி விதித்ததால் ஹார்லி-டேவிட்சன் வாகனங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அந்த நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளும் பரஸ்பர நன்மை தரக்கூடிய ஒப்பந்தத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ரஷ்யா ஒப்பந்தம்:
இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் புதின் பாராட்டியுள்ளார்.
மேலும், “இந்தியா தனது தேசிய நலன்களை முன்னிலைப்படுத்தி அனைத்து நாடுகளுடனும் உறவை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இந்தியா உறவை வலுப்படுத்துவது, ரஷ்யாவுடனான நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஈரான் போரை நிறுத்த அமெரிக்க நாடாளும்னறத்தில் டிரம்புக்கு எதிராக தீர்மானம்!
மேற்கத்திய நாடுகள் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை குறைக்க அழுத்தம் கொடுத்தாலும், அது பயனற்றது என்றும், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பது சர்வதேச உறவுகளுக்கு பாதகமானது என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளதாகவும் புதின் கூறினார்.
மேலும், இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடு என்றும், இந்தியாவை ரஷ்யா நம்பகமான கூட்டாளியாக பார்க்கிறது என்றும் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் எதிர்காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.