கேபிள் கார் விழுந்து விபத்து.. இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி.. இலங்கையில் சோகம்
Srilanka Monastery Cable Car Accident : இலங்கையில் துறவிகள் சென்ற கேபிள் கார் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

கேபிஸ் கார் விபத்து
இலங்கை, செப்டம்பர் 25 : இலங்கையில் கேபிள் கார் கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் பலர் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்டை நாடான இலங்கையில் அதிகபட்டியாக இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதே நேரத்தில், இலங்கையில் சுற்றி பார்க்கவும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக, இலங்கையில் நிக்கவேரட்டியா அருகே நா உயன ஆரண்ய சேனாசனய என்ற மடம் உள்ளது. இந்த மடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த மடம் கொழுபுவில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மலைப்பகுதியில் உள்ள இந்த மடத்திற்கு செல்ல, தரைப்பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் அழைத்து செல்லப்படுகிறார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான இன்று அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, கேபிள் காரில் துறவிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அந்த கேபிள் காரில் 13 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, இந்த கேபிள் திடீரென அறுந்து விட்டது. கேபிள் கார் கீழே இறங்கி ஒரு மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Also Read : தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகசா புயல்.. 17 பேர் பலி.. 20 லட்சம் பேர் பாதிப்பு!
இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி
STORY | Indian among 7 Buddhist monks killed in Sri Lanka monastery cable cart accident
Seven Buddhist monks, including an Indian national, were killed and six others were injured after a cable-operated rail cart overturned at a forest monastery in northwestern Sri Lanka, police… pic.twitter.com/onqGfURFZo
— Press Trust of India (@PTI_News) September 25, 2025
அங்கு விபத்தில் சிச்சியவ்ர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்த விபத்தில் கேபில் காரில் பயணித்த 13 துறவிகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக போலீசார் கூறினர். இறந்தவர்கள் இந்தியா, ரஷ்யா, ரோமானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Also Read : H1B விசா சர்ச்சை.. சீனா அறிமுகம் செய்த K விசா.. நோக்கம் என்ன?
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்து மடத்திற்கு வந்த துறவிகள், பக்தரிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கேபிஎஸ் காரில் அதிகமானோர் இருந்துள்ளனர் என்றும் இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும், கேபிஎஸ் கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.