ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் பொய்களை ஒப்புக்கொண்ட லஷ்கர் தீவிரவாதி – நடந்தது என்ன?
Pakistan Lies Shattered: இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மார்கஸ் தாயிபாவின் தலைமை செயலகம் தரைமட்டமானது. ஆனால் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த கமாண்டர் பாகிஸ்தானின் பொய்யை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

கடந்த மே 7, 2025 அன்று இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ((Operation Sindoor) தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில், லஷ்கர்-ஏ-தைபாவின் முகாம் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் முகாமுக்கு மசூத் அஸ்ஹருக்கு சம்பந்தமில்லை என பாகிஸ்தான் கூறி வந்தது. இந்த நிலையில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் கமாண்டர் ஒருவர் பாகிஸ்தானின் கூற்றை பொய் என தெரிவித்தார். அந்த வகையில் தற்போது லஷ்கர்-ஏ-பைதா கமாண்டரும் அதே போல பாகிஸ்தான் பொய்களை ஒப்புக்கொண்டார்.
கமாண்டர் காஸிம் ஒப்புதல்
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், லஷ்கர் கமாண்டர் காஸிம், மார்கஸ் தாயிபா தலைமையகம் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் இடிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதலில் இடிந்த மார்கஸ் தாயிபாவின் இடத்தில் நான் நிற்கிறேன். அதை மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அல்லாவின் அருளால் இது முன்பைக் காட்டிலும் பெரிய கட்டிடமாக உயரும் என்றார். மேலும் அந்த இடத்தில் பல தாயிபா மாணவர்கள் தீவிரவாத பயிற்சி பெற்றதாக அவர் கூறினார்.




இதையும் படிக்க : ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது? இந்தியாவுக்கு எந்த இடம்? முழு விவரம்
பாகிஸ்தானின் பொய்களை சுட்டிக்காட்டிய கமாண்டர்
🚨 🇵🇰👺 After Jaish commander ilyas kashmiri now Lashkar-e-Taiba Commander Qaasim has torn apart Pakistan’s lies on Muridke terror camps.
👉 Standing in front of the demolished Markaz E Taiba camp, which destroyed in #OperationSindoor, he admits that many terrorists… pic.twitter.com/S80p9wLSFy
— OsintTV 📺 (@OsintTV) September 19, 2025
இதே நேரத்தில் பாகிஸ்தான் அரசு அந்த கட்டிடம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்.
ஆபரேசன் சிந்தூர் தாக்குதல்கள்
இந்திய ராணுவம் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் தலைமையகம், லஷ்கர் தலைமையகம், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளம், மற்றும் சில லக்ஷர் முகாம்கள் பாதிப்படைந்தன. இந்த தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்ற சம்பவத்துக்குப் பதிலடியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீடியோவில் லஷ்கர் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் தாயிபா தலைமையகத்தை மீண்டும் கட்ட நிதி வழங்கியதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க : ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..
இந்த நேரத்தில் இந்திய உளவுத்துறையின் தகவல்படி லஷ்கர் அமைப்பு அதன் தலைமையகத்தை மீண்டும் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை 2026 பிப்ரவரி 5 அன்று காஷ்மீர் ஒற்றுமை நாளன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது அது மீண்டும் தீவிரவாத பயிற்சி மையமாக செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.