AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vladimir Putin : இதில் தலையிட வேண்டாம்.. ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

Vladimir Putin Warns America | ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த போரில் ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்க தலையிட வேண்டாம் என்று புதின் எச்சரித்துள்ளார்.

Vladimir Putin : இதில் தலையிட வேண்டாம்.. ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2025 10:31 AM IST

ரஷ்யா, ஜுன் 20 : ஈரான் – இஸ்ரேல் போரில் (Iran – Israel War) அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே 7 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பேசி வருகிறது. இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – இஸ்ரேல் போர் – ஈரானுக்கு எதிராக பேசும் அமெரிக்கா

அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரத்தில், ஈரான் தங்கள் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துமோ என்ற எண்ணத்தில் இஸ்ரேல், ஈரான் மீது ஜூன் 13, 2025 அன்று முதல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலின் உட்சபட்ச தலைவர் அலி காமெனி சரணடைய வேண்டும்  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த காமெனி, இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அந்நாட்டுக்கு சரிசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் காமெனியின் இந்த எச்சரிக்கை காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்ன செய்தியாளர்கள் ஏழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை, அடுத்து இரண்டு வாரங்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்வார் என்று அறிவித்தது. இது உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், புதின் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், இது ஆபத்தான ஒன்று. எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதற்கு போர் தீர்வாகாது என்று கூறியுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us