AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

23 ஆண்டுகளுக்கு பின் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?

PM Modi: பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். அதில் முதலாவதாக சைப்ரஸ் குடியரசிற்கு சென்றுள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் இவரே. அதனை தொடர்ந்து கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்கிறார்.

23 ஆண்டுகளுக்கு பின் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?
பிரதமர் மோடி - அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jun 2025 09:39 AM IST

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)  சைப்ரஸ் குடியரசு (Cyprus ) கனடா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் இந்தியாவின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதையும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் முதலில் சைப்ரஸ் குடியரசுக்கு அவர் சென்றுள்ளார். மத்திய தரைகடல் தீவு நாடான துருக்கியவுக்கு ஒரு செய்தியை அனுப்பும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியத்தரை கடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நுழைவாயிலாக செயல்படக்கூடிய சைப்ரஸ் உடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கு பிரதமரின் வருகையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைப்ரஸிற்கு சென்றடைந்த பிரதமர் மோடி:

இஸ்ரேல் மற்றும் ஈரான்கிடையே நடைபெற்று வரக்கூடிய மோதல் மேற்கு ஆசியாவில் உறுதியற்ற தன்மைக்கு வழி வகுத்துள்ளது. மேலும் இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்த நிச்சயம் அற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா சைப்ரஸ் பொருளாதார வழிதடத்தில் ஈடுபட இந்த சந்திப்பு வாய்ப்பு அளிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சைப்ரஸ் குடியரசுக்கு சென்ற பிரதமர் மோடியை, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் மோடியை வரவேற்றார்.

பல்துறை முன்னேற்றங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் – பிரதமர் மோடி:


சைப்ரஸ் குடியரசுக்கு மேற்கொண்டுள்ள பயணம் இந்தியா – சைப்ரஸ் உறவுகளுக்கு குறிப்பாக வர்த்தகம் உள்ளிட்டா பல துறைகளில் குறிப்பிடத்தக்க உதவியை அளிக்கும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சைப்ரஸின் தலைநகருக்கு பயணம் செய்த கடைசி பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் நிக்கோசியா பயணம் நடந்துள்ளது. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான இணைப்பை பரந்த மத்திய கிழக்குப் பகுதி வழியாகவும், சைப்ரஸ் வழியாகவும் ஏற்படுத்துவது குறித்து தானும் மோடியும் விவாதித்ததாக அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸ் தெரிவித்துள்ளார்

அதனை தொடர்ந்து, லிமோசாவில் நடைபெற்ற தொழில் அதிபர் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆண்டுகளில் டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செயல்பாடுகள் அதிகரித்து வந்துள்ளதாகவும், உலகின் 50 சதவீதம் இந்தியாவில் இருக்கக்கூடிய யு பி ஐ மூலம் நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பயணத்திட்டம் என்ன?

சைப்ரஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச பிரச்சனைகள் குறித்து உலக தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதியாக பிரதமர் மோடி, குரோஷியாவுக்கு செல்கிறார். இது ஒரு இந்தியப் பிரதமரின் முதல் குரோஷியா பயணமாகும். அதிபர் ஜோரன் மிலானோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் உடனான சந்திப்புகள் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் குரோஷியாவிற்கும் இடையிலான வரலாற்று கலாச்சார தொடர்புகளை கட்டியெழுப்பவும், ஒத்துழைப்புக்கான புதிய பாதைகளைத் திறக்கவும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நட்பு நாடுகள் அளித்த ஆதரவிற்கு பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தின் போது நன்றி தெரிவிக்க உள்ளார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உலகளாவிய புரிதலை வளர்ப்பதற்கும் இந்தப் பயணம் முயல்கிறது.

Follow Us