சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்.. நெகிழ்ச்சியுடன் சொன்ன பிரதமர் மோடி!
PM Modi Received Gift : குரோஷியா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறக்கூடும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
டெல்லி, ஜூன் 19 : குரோஷியா சென்ற பிரதமர் மோடிக்கு (PM Modi) சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை அந்நாட்டு பிரதமர் பென்கொவிக் (Croatian PM Plenkovic) பரிசாக அளித்துள்ளார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கனடா, குரோஷியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று டெல்லி திரும்பினார். 2025 ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கனடா சென்றடைந்தார். கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். ஜி7 மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். மேலும், கனடா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை, பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் குரோஷியா புறப்பட்டார். குரோஷியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குரோஷியா பிரதமர் பென்கொவிக்கை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.




இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு குரோஷியா பிரதமர் பென்கொவிக் சமஸ்கிருத புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் பொன்கொவிக், “சமஸ்கிருத இலக்கணம் என்பது 1790 ஆம் ஆண்டு குரோஷிய விஞ்ஞானி பிலிப் வெஸ்டின் லத்தீன் மொழியில் எழுதி அச்சிடப்பட்ட புத்தக்கமாகும்.
லத்தீன் மொழியில் எழுதப்பட்ட முதல் அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கணமாகும். பிலிப் வெஸ்டின் இந்தியாவில் இருந்தபோது கேரள பிராமணர்கள் மற்றும் உள்ளூர் கையெழுத்து பிரதிகள் மூலம் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த புத்தகம் எழுதப்பட்டது. வெஸ்டினின் சமஸ்கிருத இலக்கணத்தின் மறுபதிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினேன்” என்றார்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
Thank you, Prime Minister Plenković. This is indeed a remarkable symbol of the enduring intellectual and cultural bonds between India and Croatia! May these bonds get even stronger in the times to come. @AndrejPlenkovic https://t.co/zL39djuWGO
— Narendra Modi (@narendramodi) June 19, 2025
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ”பிரதமர் பென்கொவிச்சுக்கு நன்றி. இது உண்மையில் இந்தியாவிற்கும் குரோஷியாவிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளின் குறிப்பிடத்தக்க சின்னமாகும். இருநாடுகளுக்கு இடையேயனா உறவுகள் வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறக்கூடும்” என தக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று மதியம் டெல்லி வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.