Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

PM Modi Awarded Cyprus' Highest Honor | மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதலாவதாக சைப்ரஸ் சென்றடைந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில், அந்த நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் 3 அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!
விருது பெற்ற பிரதமர் மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jun 2025 07:59 AM

நிக்கோசியா, ஜூன் 17 : இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Indian Prime Minister Narendra Modi) சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் 3 (Grand Cross of the Order of Makarios 3) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கி, பிரதமர் நரேந்திர மோடியை கவுரவித்துள்ளார். மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரேஷியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அந்த வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக அந்த நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 16, 2025) சந்தித்து உரையாற்றினார்.

இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த பேச்சுவார்த்தை

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவம், வர்த்தகம், தொழில்நுட்பம் சுகாதாரம் உள்ளிட்ட  துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தும் வகையில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் சுற்றுலா குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய சைப்ரஸ்

இதனை தொடர்ந்து சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் என்ற விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கி, பிரதமர் நரேந்திர மோடியை கவுரவித்துள்ளார்.