Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஈரானின் டிவி சேனல் மீது இஸ்ரேல் தாக்குதல் – பயத்தில் அலறிய செய்தி வாசிப்பாளர் – பரபரப்பு வீடியோ

Israeli Strikes Escalate : இஸ்ரேல் மற்றும் ஈரானிடேயயான தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஈரானின் பிரபல தொலைக்காட்சி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் பயத்தில் அலறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரானின் டிவி சேனல் மீது இஸ்ரேல் தாக்குதல் – பயத்தில் அலறிய செய்தி வாசிப்பாளர் – பரபரப்பு வீடியோ
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jun 2025 22:56 PM IST

இஸ்ரேல் (Israel)  – ஈரான் (Iran) இடையிலான தாக்குதல்கள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் போர்  ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரானின் தலைநகரான தெஹரானில் உள்ள டிவி சேனலின் ஸ்டுடியோ மீது இஸ்ரேல் ஏவுகணை மூலம் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்டிடிவியின் வெளியான செய்தியின் அடிப்படையில் டிவி தொகுப்பாளர் சஹார் இமாமி நேரலை செய்திகளை வாசித்து கொண்டிருந்தபோது, திடீரென ஸ்டுடியோ முழுவதும் அதிர்ந்து குலுங்கியது. ஏவுகணை தாக்கிய தருணத்தில், பணியில் இருந்தவர்கள் பயத்தில் அலறும் சத்தங்களும் கேட்டதாக கூறப்படுகிறது. தொகுப்பாளர் கலங்கிய நிலையில் தனது இடத்தை விட்டு ஓடுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

தெஹரானில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, தொகுப்பாளர் சஹார் இமாமி மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. சில தகவல்களின்படி, தாக்குதல் நடந்த சில நேரங்களுக்கு பிறகு சஹார் மீண்டும் நேரலையில் இணைந்து செய்திகளை வாசித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.  மேலும் தெஹரானை விட்டு மக்கள் வெளியேறும் வீடியோவும் வெளியாகியுள்ளது. சாலைகள் முழுவதும் வாகன நெரிசல் காணப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுடன், தங்களை பாதுகாத்துக்கொள்ள சிறிய நகரங்களை நோக்கி புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.

 டிவி சேனல் மீது தாக்குதல்

 

இந்திய மாணவர்களின் பாதுகாப்பு

ஈரானில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள், தெஹரானிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் உள்ள கொம் நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சிலரை பிற நகரங்களுக்கும் அனுப்பி பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, “ஈரானின் அணு ஆயுத தளங்களை அழிக்க வேண்டும், மற்றொன்று ஏவுகணை ஆபத்தை தடுக்க வேண்டும் என்ற இரு முக்கியமான இலக்குகளை அடைவதில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.” என கூறியுள்ளார்.  மற்றொரு பக்கம் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ போர் தொடர்பான தகவலில் உண்மையில்லை எனவும், மக்கள் பதட்டமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டு ஊடகங்கள் மக்கள் தெஹரானில் இருந்து வெளியேறும் வாகன நெரிசலின் காட்சிகளை ஒளிபரப்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.