AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Iran Vs Israel : மூன்றாவது நாளாக தொடர்ந்த மோதல்.. மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் மற்றும் இஸ்ரேல்!

Iran-Israel Conflict Cause Nuclear Weapon Attack | ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இரண்டு நாடுகளும் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று (ஜூன் 15, 2025) இரு நாடுகளும் மாறி மாறி அணு ஆயுத தாக்குதல் நடத்தின.

Iran Vs Israel : மூன்றாவது நாளாக தொடர்ந்த மோதல்.. மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் மற்றும் இஸ்ரேல்!
ஈரான் - இஸ்ரேல் தாக்குதல்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jun 2025 08:58 AM IST

இஸ்ரேல், ஜூன் 16 : ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் (Iran – Israel Conflict) ஏற்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நாளாக நேற்றும் (ஜூன் 15, 2025) தாக்குதல் நடைபெற்றது. இதில் இரண்டு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், பெரும் பதற்றம் நிலவியது. குறிப்பாக ஜூன் 15, 2025 மற்றும் ஜுன் 16, 2025 ஆகிய இரண்டு தினங்களுக்கான இடைபட்ட இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும், இஸ்ரேலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேற்று நடைபெற்ற கடுமையான தாக்குதல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்

ஈரான் அணு ஆயுதங்களை (Nuclear Weapon) தயாரித்தால் அது தனக்கு ஆபத்து என இஸ்ரேல் கருதுகிறது. இதன் காரணமாக ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை (Nuclear Weapon Production) தடுக்கும் நோக்கில், அந்த நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ஜூன் 14, 2025 அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது தொடர தாக்குதல் நடத்தி வருகிறது. இது தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்த நிலையில், நேற்று (ஜூன் 16, 2025) இரு நாடுகளுக்கும் இடையே பயங்கர தாக்குதல் நடந்தது.

குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், அணுசக்தி திட்டத்துடன் தொடர்புள்ளதாக கூறப்படும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மறுபுறம் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி அந்நாட்டுக்குள் வெகு தொலைவு வரை சென்று ஈரானின் ஏவுகணைகள் பயங்கர தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக இரு நாடுகளிலும் நேற்று பதற்றம் நீடித்தது.

மாறி மாறி பயங்கர தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான் மற்றும் இஸ்ரேல்

நேற்று (ஜூன் 16, 2025) நடத்தப்பட்ட தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள டெஹ்ரான்பார்ஸ், நியாவரன், நிரு ஹவாய் உள்ளிட்ட பலவேறு பகுதிகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின. நிரூ ஹவாய் பகுதியில் ஈரானின் விமானப்படை தலைமையகம் உள்ள நிலையில், அது இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி, டெஹ்ரானில் 4 பயங்கர வெடி சத்தம் கேட்ட நிலையில், அங்கு மிகுந்த பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Follow Us