Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Donald Trump : டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு பேச்சு!

Israel President Benjamin Netanyahu about Trump | அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் உருவாகியுள்ளது. ஜூன் 14, 2025 முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் மாறி மாறி அணு ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Donald Trump : டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2025 11:42 AM

இஸ்ரேல், ஜூன் 16 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை (American President Donald Trump) கொலை செய்ய ஈரான் (Iran) திட்டமிட்டிருக்கிறது என்று இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், நேற்று (ஜூன் 15, 2025) உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரான் கொலை செய்ய திட்டமிட்டிருப்பது குறித்து நெதன்யாகு சொன்னது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் கடும் மோதல்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு ஆபத்து என கருதும் அந்த நாடு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுக்கும் நோக்கில் அதன் அணு சக்தி கூட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஜூன் 14, 2025 அன்று தொடங்கிய இந்த தாக்கத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக நேற்று (ஜூன் 15, 2025) ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி மிக கடுமையாக அணு ஆயுத தாக்குதல்களை நடத்திக்கொண்டன. இதன் காரணமாக இரு நாடுகளுகும் இடையே பதற்றம் நிலவியது.

உள்ளூர் ஊடகத்திடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு, டிரம்ப் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் முதல் எதிரியாக டிரம்புக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கொல்ல திட்டம் போட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார். மேலும், ஈரான் மூலம் உலகிற்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்க தேவையானதை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்

முன்னதாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தியத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த முயற்சித்தால் இதுவரை பார்த்திராத வகையில் தனது முழு பலத்துடன் ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும். ஈரான் – இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்தி, ரத்தம் சிந்தும் மோதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.