Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இஸ்ரேல் – ஈரான் பதற்றம்.. சிக்கலில் இந்திய மாணவர்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு

Iran Israel Conflict : இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, 24 மணி நேரத்திற்கு கட்டுப்பாடு அறையை இந்திய தூதரகம் அமைத்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் பதற்றம்.. சிக்கலில் இந்திய மாணவர்கள்.. உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 12:28 PM

டெல்லி, ஜூன் 17 : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் (Israel Iran Conflict) இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.  மேலும், அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கு முக்கிய அறிவிப்பை இந்திய தூதரகம் (Indian Embassy) வெளியிட்டுள்ளது. அதாவது, இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்களுக்கு உதவி எண்களையும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே  கடந்த ஐந்து நாட்களாக  போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் ஒருவரைக்கொருவர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலரும் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக வெளியேற்ற  மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

போர் பதற்றம்

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்திலிருந்து தூதரகத்தால் வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ஆர்மீனியாவின் எல்லை வழியாக ஈரானில் இருந்து வெளியேற வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. சூழ்நிலையைப் பொறுத்து மேலும் ஆலோசனைகளை வழங்க முடியும். தெஹ்ரானில் இருக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இல்லாதவர்கள் உடனடியாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடம் மற்றும் தொடர்பு எண்ணை வேண்டும்.

இதனுடன், தூதரகம் உதவி எண்களையும் பகிர்ந்து கொண்டது. +989010144557; +989128109115; +989128109109 என்ற எண்களை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிலும் 24×7 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உதவி எண்கள் அறிவிப்பு

அமெரிக்கா அறிவிப்பு

முன்னதாக, உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது” என்றார்.