AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய கிழக்கில் தொடரும் ஏவுகணை தாக்குதல்.. 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..

Iran Israel Attack: ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (ஜூன் 15 2025 ) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் ஏவுகணை தாக்குதல்.. 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..
ஈரான் இஸ்ரேல் தாக்குதல்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jun 2025 13:32 PM IST

இஸ்ரேல் ஈரான் தாக்குதல்:ஜூன் 15 2025 அதிகாலை இஸ்ரேலும் ஈரானுக்கும் இடையே புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஆப்பரேஷன் ரைசிங் லைன் என்ற பெயரில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, ஈரானில் இருக்கக்கூடிய எரிவாயு நிலையங்கள் மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரானும் இஸ்ரேயலுக்கு பதிலளிக்கும் வகையில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரானில் இருக்கும் தேஹரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத கூடங்களை குறி வைத்து தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுத காப்பகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும் இலக்கு வைத்து தாக்கியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணு ஆயுத கிடங்கை குறிவைத்து தாக்கிய இஸ்ரெல்:


முக்கியமாக இஸ்ரேலிய தாக்குதலில் தெஹரானில் உள்ள ஷகரான் எண்ணெய் கிடங்கை குறித்து வைக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேலிய ராணுவம் தெஹரானுக்கு அருகில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் வயலில் உற்பத்தியை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இஸ்ரேலிய நகரங்கள் மீது ஈரான் புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. 10 வயது சிறுவன் மற்றும் 20 வயதுடைய ஒரு பெண் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 13,2025 அன்று ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் இதுவரை குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்திக்கான வசதிகளை ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக ஈரானின் காவல்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது தாக்குதல்களில் உயர்மட்ட ஜெனரல்கள் கொல்லப்பட்டதாகவும், ஈரானின் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களும் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஜூன் 15,2025 ஆன இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்பு, ஈரானின் ஐ.நா. தூதர் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (ஜூன் 15 2025 ) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானை அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us