AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடுக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல்.. உதவி என கேட்டதும் ஓடி வந்த பாகிஸ்தான் கடற்படை!

Pakistan Navy Helped Indian Ship | இந்தியாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று அரபிக்கடலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தது. அப்போது அந்த கப்பல் திடீரென பழுதாகி நின்ற நிலையில், உதவி என அழைத்ததும் பாகிஸ்தான் கடற்படை உடனடியாக விரைந்து உதவி செய்துள்ளது.

நடுக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல்.. உதவி என கேட்டதும் ஓடி வந்த பாகிஸ்தான் கடற்படை!
பழுதாகி நின்ற கப்பல்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 May 2026 01:01 AM IST

இஸ்லாமாபாத், மே 05 : அரபிக்கடலில் (Arabian Sea) எம்.வி கவுதம் என்ற இந்திய கப்பல் பயணம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக நடுக்கடலில் நின்ற நிலையில், பாகிஸ்தான் கடற்படை (Pakistan Navy) உதவி செய்துள்ளது. இந்த நிலையில், நடுக்கடலில் தத்தளித்த இந்திய கப்பலை பாகிஸ்தான் கடற்படை உதவி செய்து மீட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரபிக்கடலில் நடுக்கடலில் சிக்கி தவித்த கப்பல்

எம்.வி கவுதம் என்ற இந்திய கப்பல் ஒன்று அரபிக்கடலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கப்பல் நடுக்கடலில் நின்று சிக்கி தவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய கடற்படை அதிகாரிகள் உடனடியாக பாகிஸ்தான் கடற்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த அழைப்பை ஏற்ற பாகிஸ்தான் கடற்படை மனிதாபிமான அடிப்படையில், இந்திய கப்பல் நின்ற இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. அவர்கள் இந்திய கப்பலில் சிக்கியிருந்த மாலுமிகளுக்கு தேவையான உணவு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : ஈரானில் போர் சூழல் – நேரடி தகவல்களுடன் செய்தியாளர் சுமைரா கான்

இந்திய கப்பலுக்கு உதவி செய்த பாகிஸ்தான் கடற்படை

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இருப்பினும் நடுக்கடலில் சிக்கி தவித்தபோது உதவி என்று அழைத்த நிலையில், பாகிஸ்தான் கடற்படை ஓடிவந்து உதவி செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து.. 20 பேர் பலியான சோகம்.. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்!

இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us