AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து.. 20 பேர் பலியான சோகம்.. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்!

Nepal Jeep Accident | நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 பேர் பலியானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து.. 20 பேர் பலியான சோகம்.. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்!
நேபாள் ஜீப் விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 May 2026 07:50 AM IST

ரோல்பா, மே 01 : நேபாளத்தின் (Nepal) ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றி சென்ற ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நடைபெற்ற கொடூர ஜீப் விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பரிதாப பலி

நேபாளத்தில் ரோல்பா மாவட்டத்தில் தபாங் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள மலைப்பாதை ஒன்றில் சென்றுக்கொண்டு இருந்த ஜீப் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்தியேலே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறலாம்.. நாசா சொன்ன ஷாக் தகவல்.. காரணம் என்ன?

விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்ட போலீசார்

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் உதவி செய்துள்ளனர். விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஹோர்முஸில் பதற்றம் அதிகரிப்பு.. சிறிய ஈரானியப் படகுகளை அழிக்க டிரம்ப் உத்தரவு

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்

இந்த விபத்தில் மேலும் சிலர் பலத்த காயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. ரோல்பா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஜீப் சென்ற சாலை வழுக்கிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விபத்து குறித்த முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us