AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்.. கதிர்வீச்சு அபாயம்? அதிர்ச்சியில் உலக நாடுகள்..

Natanz Nuclear Facility Hit: நடன்ஸ் அணுசக்தி மையம் கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், தற்போது நடைபெற்று வரும் போரின் முதல் வாரத்திலும் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்.. கதிர்வீச்சு அபாயம்? அதிர்ச்சியில் உலக நாடுகள்..
ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Mar 2026 17:54 PM IST

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கு இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி மையமான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘மிசான்’ (Mizan) வெளியிட்டுள்ள தகவலின்படி, சனிக்கிழமை (மார்ச் 21) அன்று நடன்ஸ் அணுசக்தி மையத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: “4,000 கி.மீ தூரம்.. இந்திய பெருங்கடலில் யுத்தம்.. உலகையே அதிரவைத்த ஈரானின் ‘மெகா’ ஏவுகணைத் தாக்குதல் முயற்சி..

கதிர்வீச்சு கசிவு ஆபத்து?:

தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மையம், ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் பணிகளுக்கான முக்கியத் தளமாகும். அங்கு நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அணுசக்தி மையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. சோதனைகளின் முடிவில், அணுசக்தி மையத்தில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் (No Radiation Leak) கண்டறியப்படவில்லை என்று ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ (IAEA), இதற்கு முந்தைய தாக்குதல்களின் போதும் கதிர்வீச்சு பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் மோதல்கள்:

அதேவேளை, ஈரானிய ஏவுகணையின் பாகங்கள் இஸ்ரேலில் உள்ள ஒரு காலியான மழலையர் பள்ளி (Kindergarten) மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கூடுதல் துருப்புக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.கூடுதல் படைகள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக கத்தாரில் உள்ள முக்கிய எரிவாயு நிலையம் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடந்த தாக்குதல்கள்:

நடன்ஸ் அணுசக்தி மையம் கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், தற்போது நடைபெற்று வரும் போரின் முதல் வாரத்திலும் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) இந்த மோதல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதல்கள் ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்பதால், உலக நாடுகள் மிகுந்த கவலையில் உள்ளன.

இதையும் படிக்க: கத்தாரின் LNG மீது ஈரான் தாக்குதல்.. எரிவாயு உற்பத்தி முடக்கம்.. உலக நாடுகளுக்குப் பேரிடி!

ஏன் நடன்ஸ் மையம் இலக்காகிறது?

ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை இந்த மையத்தில் உள்ள பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களில்தான் செயல்படுத்தி வருகிறது. யூரேனியத்தைச் செறிவூட்டுவதன் மூலம் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றன. எனவே, ஈரானின் அந்தத் திறனைத் தகர்ப்பதே இத்தகைய வான்வழித் தாக்குதல்களின் முக்கிய நோக்கமாகும்.

Follow Us