நடுவானில் பறந்த விமானம்.. திடீரென புகை வந்ததால் பரபரப்பு.. அவசர அவசரமாக தரையிறங்கியது!
Japan Flight Emergency | ஜப்பானில் விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென அதிலிருந்து புகை வர தொடங்கியுள்ளது. இதனால் கடும் அச்சத்திற்கு உள்ளான விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில், அறிவுரையின்படி விமானம் தரையிறக்கப்பட்டது.

மாதிரி புகைப்படம்
டோக்கியோ, செப்டம்பர் 15 : ஜப்பானில் (Japan) நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்து புகை வந்த நிலையில் , தீப்பிடிக்கும் அபாயம் நிலவியதால் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், நடுவானில் பறந்த விமானம் புகை காரணமாக உடனடியாக தரையிறங்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடுவானில் பறந்த விமானம் – திடீரென புகை வந்ததால் பரபரப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரிட்டா விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்சுக்கு போயிங் 737-800 என்ற விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது நன்றாக இருந்த நிலையில், நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வர தொடங்கியுள்ளது. இதனால் விமானத்தில் தீப்பிடித்து விடுமோ என்ற அச்சத்தில் விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு அது குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!
அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
விமானி அளித்த தகவலை அடிப்படையாக கொண்டு விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக தரை இறக்கும்படி விமானியிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக பிலிப்பைன்சுக்கு செல்லவிருந்த விமானம் ஒசாகாவில் உள்ள கான்சாய் விமான நிலையத்தில் அவரச அவசரமாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாகவே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு துறையினர், விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அவசர அவசரமாக விமானத்தில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க : ஹெலிகாப்டரில் தொங்கியபடி சென்ற அமைச்சர் குடும்பம்.. போராட்டக்காரர்களிடம் இருந்து நூலிழையில் தப்பினர்!
8 பணியாளர்கள் மற்றும் 140 பயணிகள் பத்திரமாக மீட்பு
இந்த சம்பவத்தில் இரண்டு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களை மீட்ட மீட்பு துறையினர் உடனடியாக அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்தே முதலுதவி சிகிச்சை வழங்கினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், விமானத்தில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் விமானத்தில் தீப்பிடித்ததற்கான எந்த வித அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் விமானியின் துரித நடவடிக்கையால் அந்த விமானத்தில் பயணம் செய்த 8 பணியாளர்கள் மற்றும் 140 பயணிகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.