நேரலையில் பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்.. சிரியாவை தாக்கிய இஸ்ரேல்.. திக்திக் காட்சிகள்!
Israel Syria Conflict : சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2025 ஜூலை 16ஆம் தேதியான இன்று ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது, நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் அலறி அடித்து ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிரியா (Israel Syria Conflict) தலைநகர் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள அந்நாட்டு ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் தாக்கியபோது, அப்போது நேரலையில் செய்தி வாசித்தக் கொண்டிருந்த தொகுப்பாளர், பயந்தில் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது, தொப்பாளருக்கு பின் பக்கம், திடீரென தாக்குதல் நடந்துள்ளது. இதில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பெரிய சத்தத்துடன் தாக்குதல் நடத்தியபோது, செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர், அலறி அடித்து நேரலையில் இருந்து வெளியேறி இருப்பது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.
சிரியாவின் ஸ்விடா மாகாணததில் வசித்து வரும் டுரூஸ் மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த பெடொய்ப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில், இஸ்ரேல் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் சிறுபான்மையினராக ட்ரூஸ் மதத்தினர் உள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் டுரூஸ் சமூகத்தினரிடையே பேசுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) சிரியாவில் உள்ள சமூகத்தைப் பாதுகாக்கும் என்று கூறினார். பிரதமர் நெதன்யாகுவும், பாதுகாப்பு அமைச்சராக நானும் ஒரு உறுதிமொழியை எடுத்துள்ளோம் – அதை நாங்கள் நிலைநிறுத்துவோம் என கூறினார்.




Also Read : ட்ரோன் தாக்குதல்.. அதிபர் மீது கொலை முயற்சி… பதறிய ஈரான்!
நேரலையில் பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்
Dramatic visuals of an Israeli airstrike captured from a news studio in Damascus, Syria a short while ago. pic.twitter.com/H6ox4K1lqq
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 16, 2025
இஸ்ரேல் சிரியா மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் நடந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “எனது சகோதரர்களே, இஸ்ரேலின் ட்ரூஸ் குடிமக்களே, சுவாடா மற்றும் தென்மேற்கு சிரியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இஸ்ரேலிய இராணுவமும் விமானப்படையும் இந்தப் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Also Read : மரண தண்டனை ரத்தாகுமா? போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்… பின்னணி என்ன?
எங்கள் ட்ரூஸ் சகோதரர்களைக் காப்பாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் அனைவரும் இஸ்ரேலின் குடிமக்கள். எல்லையைத் தாண்ட வேண்டாம். நீங்கள் இதைச் செய்தால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். நீங்கள் கொல்லப்படலாம். நீங்கள் கடத்தப்படலாம். உங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.