இங்கிலாந்து பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி.. ஒப்பந்தம் கையெழுத்து!

PM Modi UK Visit : இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றார். அங்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, இங்கிலாந்து கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும்.

இங்கிலாந்து பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி..  ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடி

Updated On: 

24 Jul 2025 16:35 PM

டெல்லி, ஜூலை 24 : அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். இருநாடு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குறிப்பாக, இந்தியா இங்கிலாந்து இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது இருநாடுகளுக்கான பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தக்ம் இரட்டிப்பாகும். நீண்ட காலமாகவே, இந்தியா இங்கிலாந்து இடையே நல்லுறவு இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இங்கிலாந்துக்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். 2025 ஜூலை 23ஆம் தேதியான நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இரவு இங்கிலாந்து சென்றடைந்தார்.

இங்கிலாந்து சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொர்ந்து, இங்கிலாந்து, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் இடையே கையெழுத்தானது.

Also Read : ‘ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு கிடைத்த வாய்ப்பு’ நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

இங்கிலாந்து, இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “பல ஆண்டுகால கடின உழைப்புக்குப் பிறகு, இன்று நமது இரு நாடுகளும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒப்பந்தம் வெறும் பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல. இருநாடுகளுக்கான வளர்ச்சி திட்டமும் தான்.

இதன் மூலம் இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்கள் இங்கிலாந்தில் சிறந்த சந்தை அணுகலைப் பெறும். இந்தியாவின் விவசாய விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிலுக்கு இங்கிலாந்து சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

இந்த ஒப்பந்தம் குறிப்பாக இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் பயனளிக்கும். இந்திய மக்களுக்கும் தொழில்துறைக்கும், மருத்துவ சாதனங்கள் போன்ற இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் நியாயமான மற்றும் மலிவு விலையில் கிடைக்கும்” என தெரிவித்தார்.

Also Read : பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய குடிமகன் விருது.. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரு நாட்டு தலைவர்கள்..

தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், ” ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிறகு இங்கிலாந்து செய்து கொண்ட மிகப்பெரிய, பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் இது என்பதை நாம் இருவரும் அறிவோம். இந்தியா இதுவரை செய்து கொண்ட மிக விரிவான ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. எனவே, பிரதமரே, உங்கள் தலைமைக்கும் உங்கள் நடைமுறைவாதத்திற்கும் நன்றி. இந்த ஒப்பந்தத்தை எல்லை மீறச் செய்ய மிகவும் கடினமாக உழைத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.