Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய குடிமகன் விருது.. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரு நாட்டு தலைவர்கள்..

PM Modi: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் மிக உயர்ந்த தேசிய விருதை ஜனாதிபதியால் கௌரவிப்பது எனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமை மற்றும் உணர்ச்சிகரமான தருணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய குடிமகன் விருது.. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரு நாட்டு தலைவர்கள்..
பிரேசிலின் உயரிய குடிமகன் விருது பெற்ற பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jul 2025 08:43 AM

பிரதமர் மோடி, ஜூலை 9, 2025: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கிய உலகளாவிய தளங்களில் இந்தியா பிரேசில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்த விருதை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலக்க நான்கு நாள் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உலகளாவிய விஷயங்கள் குறித்து விவாதித்தார். குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

பிரேசில் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை:

அதனைத் தொடர்ந்து பிரேசில் அதிபருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. அதில் எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதம், கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அந்த நாட்டின் உயரிய குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:


அதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டனர். அதில் இன்று பிரேசிலின் மிக உயர்ந்த தேசிய விருதை ஜனாதிபதியால் கௌரவிப்பது எனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமை மற்றும் உணர்ச்சிகரமான தருணம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி லூலாவிற்கும், பிரேசில் அரசாங்கத்திற்கும், பிரேசில் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலின் உயரிய குடிமகன் விருது:


இது தொடர்பான பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தில், “ எனக்கு இந்த விருது வழங்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி லூலா அரசாங்கம் மற்றும் பிரேசில் மக்களுக்கு நன்றி. இது பிரேசில் மக்கள் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள வலுவான பாசத்தை வெளிப்படுத்துகிறது. வரும் காலங்களில் நமது நட்பு இன்னும் புதிய வெற்றிகளை அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்

இந்தியா பிரேசில் மூலோபய கூட்டாண்மையின் சிற்பியாக அதிபர் லூலா இருந்தார் என்றும் இருதரப்பு உறவுகளை உயர்ந்த உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அவரது அயராத முயற்சிகளுக்கு இந்த விருது ஒரு மரியாதை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்ததிற்கு எதிராக இந்தியா – பிரேசில்:

பிரதமர் மோடியும் அதிபர் லூலாவும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பயங்கரவாதத்தையும் அதை ஆதரிப்பவர்களையும் இந்தியாவும் பிரேசிலும் கடுமையாக எதிர்க்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்றும் பாகிஸ்தான் மற்றும் அதன் அனைத்து கால நட்பு நாடான சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவு குரல் தெரிவித்த அதிபர் லூலாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், விண்வெளி எரிசக்தி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையே ஆன உறவுகள் உள்ளிட்ட பன்முக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதங்களை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிந்தர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.